'இந்த மருந்தை வெறும் வயித்துல...' '3 நாள் சாப்பிட்டா போதும்...' 'கொரோனா வராது...' 'நாங்க இத யூஸ் பண்றோம்...' தமிழக அரசு அறிவிப்பு...!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Issac | May 19, 2020 07:42 PM

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் ஆர்செனிகம் ஆல்பம்-30 என்ற ஹோமியோபதி மருந்தை தமிழகத்தில் உள்ள அனைத்து ஹோமியோபதி மருந்து கடைகளிலும் விற்கப்படுவதாக பொதுநல வழக்கில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

Govt of TN announced drug Arsenicum Album-30 is being sold

இந்தியாவில் பரவி வரும் கொரோனா வைரஸ் தாக்கத்தை கட்டுப்படுத்த அலோபதி, ஆயுர்வேதம், ஹோமியோபதி உள்ளிட்ட அனைத்து முறைகளிலும் மருந்து கண்டுபிடிக்க முயற்சித்து வருகின்றனர். மேலும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் முறைகளையும் மத்திய மற்றும் மாநில அரசுகள் வழிவகுத்துவருகிறது.

இந்நிலையில் நோய் எதிர்ப்பு சக்தி மருந்தான ஆர்செனிகம் ஆல்பம்-30 என்ற ஹோமியோபதி மருந்தை தொடர்ந்து 3 நாட்களுக்கு வெறும் வயிற்றில் சாப்பிடுவது நல்லது என்றும், ஒரு மாதத்திற்கு பின்னர் இதே முறையில் 3 நாட்களுக்கு மருந்தை உட்கொள்ள வந்தால் கொரோனா வைரஸை தடுக்கும் அளவிற்கு நோய் எதிர்ப்பு சக்தியை உண்டு செய்யும் எனவும் மத்திய ஆயுஷ் அமைச்சகத்தின் பரிந்துரை செய்துள்ளது.

இந்த முறையினை கேரளா, பஞ்சாப், தெலுங்கானா, குஜராத் உள்ளிட்ட மாநிலங்கள் பின்பற்றுவதாகவும், தமிழகமும் இந்த ஆர்செனிகம் ஆல்பம்-30 பயன்படுத்த வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு பொதுநல வழக்கானது தொடரப்பட்டது.

இன்று விசாரணைக்கு வந்த இந்த வழக்கில் தமிழக அரசு ஆர்செனிகம் ஆல்பம்-30 என்ற ஹோமியோபதி மருந்தை பயன்படுத்த ஆயுஷ் அமைச்சகம் ஒப்புதல் அளித்து. மேலும் அதை பயன்படுத்த தமிழக அரசு அரசாணை பிறப்பித்து, அதை அமல்படுத்தி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது தமிழகத்தில் உள்ள அனைத்து ஹோமியோபதி மருந்து கடைகளிலும் இந்த மருந்து கிடைப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.