'கொரோனா தடுப்பூசி ஃபெயிலியர்...' 'டெஸ்ட் பண்ணின குரங்குகளுக்கு கொரோனா...' 'சோதனைக்கு வந்த சோதனை...' விஞ்ஞானிகள் அதிர்ச்சி...!

முகப்பு > செய்திகள் > உலகம்

By Issac | May 19, 2020 05:32 PM

லண்டன் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக விஞ்ஞானிகள் கண்டுபிடித்ததாக அறிவித்த கொரோனா தடுப்பூசி தோல்வியில் முடிந்துள்ளது.மேலும் கொரோனா தடுப்பூசி செலுத்திய 6 ரீசஸ் குரங்குகளும் கொரோனா வைரஸ் தாக்கியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

Oxford University scientists says corona vaccination fails

ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக விஞ்ஞானிகள் உருவாக்கிய கொரோனா வைரஸ் தடுப்பூசி தற்போது  முதல் மனித மருத்துவ பரிசோதனைக்கு உட்பட்டுள்ளது.  ஆனால் இதற்கு முந்தைய நிலையில் பரிசோதிக்கப்பட்ட குரங்குகள் கொரோனா வைரசால் பதிப்படைந்துள்ளதால், தற்போது இந்த சோதனையில் பின்னடைவு ஏற்பட்டு உள்ளது. இதனால் விஞ்ஞானிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இதுகுறித்து கூறிய பேராசிரியர் டாக்டர் வில்லியம் ஹசெல்டின், முன்பு கொரோனா தடுப்பூசி போடப்பட்ட ஆறு குரங்குகளையும் சோதித்தபோது, தடுப்பூசி போடப்படாத மூன்று குரங்குகளின் மூக்கில் எவ்வளவு கொரோனா வைரஸ் இருந்ததோ, அதே அளவு தடுப்பூசி போடப்பட்ட குரங்குகளின் மூக்கிலும் இருப்பது தெரியவந்தது.

இதன் காரணமாகவே இந்த தடுப்பூசி மருந்து சோதனையில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. மேலும், 90 மில்லியன் பவுண்டுகள் செலவில் தயாரிக்கப்படும் கொரோனா தடுப்பூசி, கொரோனாவைத் தடுக்காமல் போகலாம். குரங்குகளை போல் மனிதர்களுக்கும் தடுப்பூசி போட்டால் மனிதர்களுக்கும் கொரோனா தொற்று ஏற்படும், அவர்களால் இன்னும் அதிகமானோருக்கு பரவவும் வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்தார்.

மேலும் எடின்பர்க் பல்கலைக்கழக பேராசிரியரான எலினோர் ரிலே கூறும்போது, தடுப்பூசி போடப்படும் மனிதர்களின் உடலில் உருவாகும் ஆன்டிபாடிகளின் எண்ணிக்கை எதிர்காலத்தில் நோய்த்தொற்று ஏற்படுவதை தடுக்கும் அளவிலோ, மற்றவர்களுக்கு நோயை பரப்புவதிலிருந்தோ தடுக்கும் அளவில் இல்லை. இதே நிலை மனிதர்களுக்கு ஏற்படுமாயின் இந்த தடுப்பூசி குறைந்த விதத்தில் மட்டுமே கொரோனாவிடமிருந்து பாதுகாக்க முடியும். ஆனால் அவர்கள் மற்றவர்களுக்கு கொரோனா பரவுவதை இது கண்டிப்பாக தடுக்காது என திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.