63 அடி 'குழிக்குள்' சென்று.. வெளியே 'வந்த' அஜித்குமார்.. வேகமெடுக்கும் பணிகள்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்By Manjula | Oct 28, 2019 11:06 PM
குழந்தை சுஜித்தை மீட்க இதுவரை 63 அடி ஆழத்துக்கு குழி தோண்டப்பட்டு உள்ளது. இந்த குழிக்குள் உள்ள மண் பாறை மற்றும் குழியின் தன்மை குறித்து ஆய்வு செய்வதற்காக அஜித்குமார் என்னும் தீயணைப்பு வீரர் பாதுகாப்பு உபகரணங்களுடன் ஏணி வழியாக உள்ளே சென்றார்.
தொடர்ந்து ,மண்ணின் தன்மையை ஆய்வு செய்துவிட்டு அவர் வெளியே வந்தார். உள்ளிருந்து ரிக் இயந்திரத்துக்கு இடையூறாக இருந்த பாறை ஒன்றையும் அவர் வெளியே எடுத்துவந்தார். இந்த பாறையால் தான் ரிக் இயந்திரம் தோண்டுவது தாமதமாக ஆனது. இதுகுறித்து அஜித்குமார் பேசுகையில், ''சிறுவனை மீட்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். இப்போது 50 அடிக்கு கீழே சென்றுவந்திருப்பேன். எளிதாக தான் இருந்தது" எனக் கூறினார்.
60 அடிக்கு கீழே பாறைகள் இருக்காது என முன்னரே தெரிவித்து இருந்தனர். இதனால் தற்போது சுஜித்தை காப்பாற்றும் பணிகள் வேகமெடுத்து உள்ளன.