‘வெளுக்கும் கனமழை’!.. அடுத்த 6 மணிநேரத்துக்கு 7 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்தமிழகத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக 7 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து வருகிறது. இதனால் பல மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக ஆறு, ஏரி, குளங்கள் வேகமாக நிரம்பி வருகின்றன. இந்த நிலையில் தமிழ்நாட்டின் 7 மாவட்டங்களில் அடுத்த 6 மணி நேரத்திற்கு மாநில பேரிடர் மேலாண்மை வாரியம் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளது.
அதில் அரியலூர், காஞ்சிபுரம், விழுப்புரம், நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், திருச்சி, ஆகிய 7 மாவட்டங்களில் அடுத்த 6 மணி நேரத்திற்கு கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதனால் இந்த 7 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்து மாநில பேரிடர் மேலாண்மை வாரியம் தகவல் தெரிவித்துள்ளது. இதனைத் தொடர்ந்து இந்த மாவட்டங்களில் நீர்நிலைகளின் கரையோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மற்ற செய்திகள்
