'அப்படி மட்டும் சொல்லாதீங்க'... 'நேரலையில் பாஜக தலைவர் மீது செருப்பை வீசிய பங்கேற்பாளர்'... அவர் ’அப்படி’ என்ன சொன்னார்?... வைரலாகும் வீடியோ!
முகப்பு > செய்திகள் > இந்தியாதொலைக்காட்சி நேரலையில் நடந்த விவாதத்தின் போது பாஜக மாநில பொதுச்செயலாளர் விஷ்ணு வர்தன் மீது செருப்பு வீசிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொலைக்காட்சி விவாதங்கள் தற்போது வார்த்தை போரைத் தாண்டி, சில நேரங்களில் கைகலப்பு வரை செல்லும் அளவிற்கு மாறி வருகிறது. அப்படி ஒரு சம்பவம் தான் தற்போது ஆந்திராவில் நடந்துள்ளது. தெலுங்கு செய்தி சேனல் ஒன்றில் நடந்த விவாதத்தின் போது நடந்த இந்த சம்பவம் தான் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
பாஜக மாநில பொதுச்செயலாளர் விஷ்ணு வர்தன் மீது செருப்பு வீசிய நபர் அமராவதி பரிரக்ஷனா சமிதி இணைச் செயற்குழு உறுப்பினரான கொளிக்காபுடி ஸ்ரீநிவாச ராவ் என்று தெரியவந்துள்ளது. பாஜக தலைவர் விஷ்ணு வர்தன் ஏதோ ஒன்று கூற அதில் கோபமான கொளிக்காபுடி ஸ்ரீநிவாச ராவ், செருப்பை வீசியது தெரியவந்துள்ளது.
அதாவது அமராவதி பரிரக்ஷனா சமிதியின் ஸ்ரீநிவாச ராவை நோக்கி உங்களுக்கும் தெலுங்கு தேசத்துக்கும் தொடர்பு உள்ளது ,நீங்கள் தெலுங்கு தேசக் கட்சியின் ஆள் என்ற தொனியில் கூற கோபமடைந்த ஸ்ரீநிவாச ராவ் செருப்பைக் கழற்றி விஷ்ணு வர்தன் மேல் வீசியிருக்கிறார்.
இந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வரும் நிலையில் பலரும் தங்களின் கண்டனங்களைப் பதிவிட்டு வருகிறார்கள்.
Full Nataka! BJP leader Vishnuvardhan Reddy gets into a heated debate with Amaravati JAC leader Srinivas Rao- ends with Srinivas Rao hurling his slipper at the BJP leader pic.twitter.com/FkCmkyIJyd
— Akshita Nandagopal (@Akshita_N) February 24, 2021

மற்ற செய்திகள்
