'இது நம்ம லிஸ்ட்லேயே இல்லையே'... 'வேட்பாளர் பட்டியல் வெளியிடும் முன்பே வேட்புமனு தாக்கல்'... அதிர்ந்துபோன பாஜக!
முகப்பு > செய்திகள் > தமிழகம்தமிழக தேர்தல் நெருங்கி வரும் நிலையில், நொடிக்கு நொடி பல பல பரபரப்புகள் தொற்றி கொண்டுள்ளன.

அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாஜக 20 தொகுதிகளில் போட்டியிடுகிறது. இதற்கான பட்டியல் 10-ம் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. அதன்படி, 1. திருவண்ணாமலை, 2. நாகர்கோவில், 3. குளச்சல், 4. விளவங்கோடு, 5. ராமநாதபுரம், 6. மொடக்குறிச்சி, 7. துறைமுகம், 8. ஆயிரம் விளக்கு, 9. திருக்கோவிலூர், 10. திட்டக்குடி (தனி), 11. கோவை தெற்கு, 12. விருதுநகர், 13. அரவக்குறிச்சி, 14. திருவையாறு, 15. உதகமண்டலம், 16. திருநெல்வேலி, 17. தளி, 18. காரைக்குடி, 19. தாராபுரம் (தனி), 20. மதுரை வடக்கு ஆகிய 20 தொகுதிகளில் பாஜக போட்டியிடுகிறது.
இருப்பினும் பாஜக போட்டியிடும் தொகுதிகளில் அதன் வேட்பாளர்களை இன்னும் அறிவிக்கவில்லை. பாஜக வேட்பாளர் பட்டியலை இறுதி செய்ய அக்கட்சியின் மாநிலத் தலைவர் எல்.முருகன், மாநில பொதுச் செயலாளர் கேசவ விநாயகம், முன்னாள் மத்திய அமைச்சரும் கன்னியாகுமரி மக்களவை தொகுதி வேட்பாளருமான பொன்.ராதாகிருஷ்ணன் அடங்கிய குழுவினர் இன்று டெல்லி சென்றுள்ளனர்.
இதில், வேட்பாளர்களின் சாதக, பாதகங்களை அறிந்து இறுதிப் பட்டியலை பாஜக மத்தியத் தேர்தல் குழு இன்று இரவோ, நாளையோ வெளியிட உள்ளது. நிலைமை இப்படி இருக்க முன்னாள் அமைச்சரும் தற்போதைய பாஜக மாநிலத் துணைத் தலைவருமான நயினார் நாகேந்திரன் நெல்லையில் போட்டியிட இன்று வேட்பு மனுத்தாக்கல் செய்தார்.
பாஜக வேட்பாளர் பட்டியல் இதுவரை வெளியாகாத நிலையில், நயினார் நாகேந்திரன் பாஜக சார்பில் வேட்பு மனுத்தாக்கல் செய்திருப்பது அக்கட்சியினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மற்ற செய்திகள்
