‘திடீரென பற்றி எறிந்த ஏடிஎம் மையம்.. பதறிய மக்கள்’! சாம்பலான பல லட்சம் ரூபாய்! பதற வைக்கும் சம்பவம்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Arunachalam | May 29, 2019 06:42 PM

ஏடிஎம் மையத்தில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தால் லட்சக்கணக்கான ரூபாய் நோட்டுகள் எரிந்து நாசமாகியுள்ளது.

fire accident in ATM center more than lakhs was burned in the fire

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் மதுரை - அருப்புக்கோட்டை சாலையில்  தனியார் ஏடிஎம் மையம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் இன்று அதிகாலை ஏடிஎம் மையத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், இச்சம்பவம் குறித்து அருகில் இருந்த நபர்கள் தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து, சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த அருப்புக்கோட்டை தீயணைப்புத் துறையினர், நீண்ட போராட்டத்திற்கு பிறகு தீயை அணைத்துள்ளனர்.

இச்சம்பவத்தால் ஏடிஎம் மையம் முழுவதும் எரிந்து சேதமடைந்தது. இந்நிலையில், மின்கசிவால் தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது. மேலும், விபத்து எப்படி ஏற்பட்டது என்பது குறித்து, அருப்புக்கோட்டை காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், ஏடிஎம் மெஷின் முழுவதுமாக எறிந்ததால் அதிலிருந்த லட்சக்கணக்கான ரூபாயும் சாம்பலானதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், ஏடிஎம் மெஷினில் சுமார் ரூ7 லட்சம் இருந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து, ரூபாய் நோட்டுகள் எரிந்து சாம்பலானதால் குறிப்பிட்ட தனியார் வங்கிக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.

Tags : #VIRUDHUNAGAR #ATM #CENTER #FIRE ACCIDENT