'நெருங்கும் சட்டமன்ற தேர்தல்'... முதல்வரின் அடுத்தகட்ட சூறாவளி சுற்றுப்பயணத் திட்டம்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாளை முதல் 26-ந்தேதி வரை 3 நாட்கள் தென் மாவட்டங்களில் பிரசாரம் செய்கிறார்.
சட்டமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சூறாவளி சுற்றுப்பயணம் செய்து தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். ஏற்கனவே 2 கட்ட பிரசாரத்தை முடித்துள்ள முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று சேலத்தில் கட்சி நிர்வாகிகளைச் சந்தித்து ஆலோசனை நடத்தி வருகிறார்.
3-ம் கட்ட தேர்தல் சூறாவளி சுற்றுப்பயணத்தை நாளை தொடங்குகிறார். முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாளை (24-ந்தேதி) முதல் 26-ந்தேதி வரை 3 நாட்கள் தென் மாவட்டங்களில் பிரசாரம் செய்கிறார். அவர் பேசும் ஊர்கள் விவரம் வருமாறு:-
24ம் தேதி காலை 9 மணி- கரூர், 10.30 மணி- அரவக்குறிச்சி தொகுதி பரமத்தி, 11.30 மணி- வேடசந்தூர், மதியம் 12.30 மணி-ஒட்டன்சத்திரம், 3 மணி- பழனி, மாலை 5 மணி- நிலக்கோட்டை, ஆத்தூர் தொகுதி செம்பட்டி, 6.30 மணி- திண்டுக்கல், இரவு 7.30 மணி-நத்தம்.
25ம் தேதி காலை 9 மணி- மதுரை கிழக்கு தொகுதி ஒத்தக்கடை, 10 மணி- மேலூர், 11 மணி- சோழவந்தான் தொகுதி அலங்காநல்லூர், மதியம் 12 மணி திருமங்கலம் தொகுதி செக்கானூரணி, 1 மணி- உசிலம்பட்டி, 3 மணி- திருப்பரங்குன்றம், மாலை 4.30 மணி- மதுரை மேற்கு தொகுதி ஜெயம் தியேட்டர், 5.30 மணி- மதுரை மத்தியம் தொகுதி ஆரப்பாளையம், 6 மணி- மதுரை தெற்கு தொகுதி முனிச்சாலை, இரவு 8.30 மணி- காரைக்குடி.
26ம் தேதி காலை 9.30 மணி- திருப்பத்தூர், 10.15 மணி- சிவ கங்கை, 11 மணி- மானாமதுரை, மதியம் 12 மணி- அருப்புக்கோட்டை, 3 மணி- விருதுநகர், 4.30 மணி-சிவகாசி, மாலை 5.30 மணி- ஸ்ரீவில்லிப்புத்தூர், 6.30 மணி- ராஜபாளையம், இரவு 8 மணி- சாத்தூர், 9 மணி- கோவில்பட்டி தொகுதி கயத்தாறு.