VIDEO: 'பேசி பேசி மங்கிப் போன முதல்வர் தொண்டை'!.. "தொண்டையே போனாலும் பரவால்ல... 'அது' நடந்துடக் கூடாது"!.. உடனே ஆர்ப்பரித்த மக்கள் கூட்டம்!.. என்ன சொன்னார் முதல்வர்?
முகப்பு > செய்திகள் > தமிழகம்வேதாரண்யத்தில் அதிமுக வேட்பாளரை ஆதரித்து பரப்புரையில் ஈடுபட வந்த முதல்வரின் தொண்டை மங்கியதால் பேச முடியாமல் சிறிது நேரம் சிரமப்பட்டார்.
நாகை மாவட்டம் வேதாரண்யம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளரும், கைத்தறித்துறை அமைச்சருமான ஓ.எஸ்.மணியனை ஆதரித்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டார்.
அப்போது, நண்பகல் 12 மணிக்கு வேதாரண்யம் வந்த முதல்வர் பழனிசாமி, திறந்த வேனில் நின்றபடி அதிமுக வேட்பாளரை ஆதரித்து பரப்புரையில் ஈடுபட்டார். இந்நிலையில், தொடர்ந்து தேர்தல் பரப்புரைக் கூட்டங்களில் பேசிவந்ததால் சிறிது தொண்டை பாதிக்கப்பட்டு பேசமுடியாமல் சிரமப்பட்டார்.
பின்னர், தண்ணீர் குடித்த முதல்வர் பழனிசாமி, "தொண்டை மங்கிப் போச்சு, அதனால் பேச்சு வரல" என்றார்.
தொண்டையே போனாலும் பரவால்ல...
திமுகவ தோற்கடிச்சு ஓடவிடணும்.. 😀😎
Thalaivan for a reason ❤ pic.twitter.com/YLVCym4Ul6
— Prasath (@imprasath) March 19, 2021
மேலும், "தொண்டயே போனாலும் பரவால்ல, திமுகவ தோற்கடிச்சு ஓடவிடணும்" என்று அவர் பேசியபோது அங்கு கூடியிருந்த மக்கள் ஆர்ப்பரித்தனர்.
திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர் மாவட்டங்களில் நேற்று (18.03.2021)பெருந்திரளாக கூடியிருந்த பொதுமக்களிடையே அம்மா அரசின் சாதனைகளையும், தேர்தல் வாக்குறுதிகளையும் முன்னிறுத்தி பிரச்சாரம் மேற்கொண்டேன்.நல்லாட்சி தொடர்ந்திட அவர்கள் அளித்த ஆதரவினை கண்டு மனம்நெகிழ்கிறேன். pic.twitter.com/IzqVyymAHh
— Edappadi K Palaniswami (@EPSTamilNadu) March 19, 2021
இதற்கிடையே, திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர் மாவட்டங்களில் நேற்று (18.03.2021) ஒரே நாளில் பெருந்திரளாக கூடியிருந்த பொதுமக்களிடையே அதிமுக அரசின் சாதனைகளையும், தேர்தல் வாக்குறுதிகளையும் முன்னிறுத்தி பிரச்சாரம் மேற்கொண்டார்.
இன்று (19.03.2021) குன்னம் தொகுதியின் அதிமுக வேட்பாளர் ராஜேந்திரனுக்கு ஆதரவாக வாக்கு சேகரித்தார்.