‘இந்த விஷயத்துல தமிழகம்தான் முதலிடம்’!.. தேர்தல் பரப்புரையில் முதல்வர் பழனிசாமி பெருமிதம்..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்சட்டம், ஒழுங்கு பிரச்சனை இல்லாத மாநிலமாக தமிழகம் திகழ்வதாக முதல்வர் பழனிசாமி பெருமையோடு தெரிவித்துள்ளார்.

தமிழகம் முழுவதும் சூறாவளியாக பிரச்சாரம் மேற்கொண்டு வரும் முதல்வர் பழனிசாமி, நேற்று கடலூர் மாவட்டம் சிதம்பரம் தொகுதி அதிமுக வேட்பாளர் பாண்டியனை ஆதரித்து வாக்கு சேகரித்தார்.
அப்போது பேசிய முதல்வர் பழனிசாமி, ‘சட்டம், ஒழுங்கு பிரச்சனை இல்லாத மாநிலங்களில் தமிழகம் முதலாவதாக உள்ளது. உச்சநீதிமன்றம் வரை சென்று காவிரி உரிமைகளை பெற்றுத் தந்தது அதிமுக அரசுதான்’ என பெருமையோடு கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், ‘சிதம்பரம் தொகுதியில் திட்டுக்காட்டூர் உயர்மட்ட பாலம், கொள்ளிடம் ஆற்றில் தடுப்பணை என ஏராளமான திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. அதேபோல் ராஜா முத்தையா கல்லூரி, அரசு கல்லூரியாக அறிவிக்கப்பட்டுள்ளது’ என முதல்வர் பழனிசாமி பேசினார்.
சட்டமன்ற தேர்தல் முடிந்து மீண்டும் நமது ஆட்சி அமையுமானால், 6 சிலிண்டர்கள் இலவசம், முதியோர் உதவித்தொகை உயர்வு என ஏரளானமான திட்டங்களை வழங்க தமது தலைமையிலான அரசு தயாரக உள்ளதாக பரப்புரையில் முதல்வர் பழனிசாமி தெரிவித்தார்.

மற்ற செய்திகள்
