'சீமானின் ஆண்டு வருமானம் ரூ.1,000 விவகாரம்'... 'கடுமையாக எழுந்த விமர்சனம்'... திடீரென நடந்த அதிரடி திருப்பம்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்சீமான் வேட்புமனுவில் ஆண்டு வருமானம் ரூ.1,000 எனத் தாக்கல் செய்த விவகாரத்தில் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில், சென்னை திருவொற்றியூர் தொகுதியில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் போட்டியிடுகிறார். இதையடுத்து சீமான் தாக்கல் செய்த வேட்புமனுவில் அவரது ஆண்டு வருமானம் ரூ.1,000 எனக் குறிப்பிட்டிருந்தார். இது எப்படி சாத்தியம் எனக் கடுமையான விமர்சனம் எழுந்தது. சமூக வலைத்தளங்களில் பலரும் இதுகுறித்து கடுமையாக விமர்சித்தனர்.
இந்த விவகாரம் பெரும் சர்ச்சையாக மாறிய நிலையில், இந்நிலையில், அக்கட்சி சார்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது. அதில், ''சீமான் தாக்கல் செய்த வேட்பு மனுவில், அவரது ஆண்டு வருமானம் தவறுதலாக இடம்பெற்றுள்ளது. அவர் வருமான வரித்துறைக்குச் செலுத்திய தொகைதான் ரூ.1,000. அவரது ஆண்டு வருமானம் ரூ.2 லட்சத்து 60 ஆயிரம். எனவே, மேற்கண்ட தவற்றைத் திருத்தி புதிய பிரமாணப் பத்திரம் இன்று (மார்ச் 18) தாக்கல் செய்யப்படும்" என்று அக்கட்சி தெரிவித்துள்ளது.