'லாட்டரியில விழுந்தது 6 கோடி...' 'ஆனா டிக்கெட் அவர் கையில இல்ல...' 'பெண்மணி எடுத்த முடிவினால்...' - நெகிழ்ந்து போன வாடிக்கையாளர்...!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Issac | Mar 23, 2021 02:59 PM

கேரள மாநிலம் எர்ணாகுளம் அருகேயுள்ள பட்டிமட்டம் என்ற இடத்தில் இருக்கும் பாக்கியலக்ஷ்மி லாட்டரி ஏஜென்சியில் டிக்கெட்டுகளை விற்று வருபவர் ஸ்மிதா மோகன். இவரின் வாடிக்கையாளர் சந்திரன் என்பவர் மட்டும் எப்போதும் கடனுக்காக லாட்டரி வாங்குவார்.

kerala woman honestly gave it to the lottery ticket holders

இந்நிலையில் சில நாள்களுக்கு முன்பு கேரள மாநில கோடை கால பம்பர் பரிசுக்கான லாட்டரி டிக்கெட்டை ஸ்மிதாவிடத்தில் போன் வழியாக சந்திரன் புக் செய்துள்ளார். அதன்பின் தற்போது ஸ்மிதா சந்திரனுக்காக வாங்கி வைத்திருந்த டிக்கெட்டுக்கு கேரள கோடைகால லாட்டரியில் முதல் பரிசான ரூ. 6 கோடி விழுந்தது.

இந்த செய்தி கேள்விப்பட்டவுடன் ஸ்மிதா, உடனடியாக சந்திரனை நேரில் அழைத்த ஸ்மிதா, தன் வசமிருந்த டிக்கெட்டை அவரிடத்தில் ஒப்படைத்தார். இந்த டிக்கெட்டை ஸ்மிதாவே வைத்திருந்தாலும் சந்திரனால் ஏதும் கேட்க முடியாது. ஆனால் ஸ்மிதாவோ, துளி பணத்துக்கு கூட ஆசைப்படாமல் தன்னிடத்தில் டிக்கெட்டை கொடுத்த ஸ்மிதாவுக்கு கண்ணீருடன் சந்திரன் நன்றி தெரிவித்தார். டிக்கெட் விலை 200 ரூபாயையும் உடனே கொடுத்தார்.

அதன்பின் சந்திரன் குட்டமசேரி பகுதியிலுள்ள எஸ்.பி.ஐ வங்கியில் அந்த லாட்டாரி டிக்கெட்டை டெபாசிட் செய்தார். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரவி அனைவரும் ஸ்மிதாவை பாராட்டிவருகின்றனர்  இதற்கு காரணம் ஸ்மிதா மோகனின் கதைதான்.

kerala woman honestly gave it to the lottery ticket holders

ஸ்மிதாவின் 13 வயதுடைய மூத்த மகன் மூளையில் கட்டி ஏற்பட்டு அதற்காக சிகிச்சை பெற்று வருகிறான். இரண்டு வயது இளையமகனுக்கு புற்றுநோய் பாதித்துள்ளது. இதற்காக பல்வேறு வகையில் உழைத்து வரும் ஸ்மிதா இக்கட்டான சூழலிலும் சந்திரன் கடனுக்கு வாங்கிய டிக்கெட்டை அவரிடத்தில் ஒப்படைத்துள்ளார்.

மேலும் லாட்டரி சீட்டு விழுந்த பூங்கா பராமரிப்பாளராக பணியாற்றும் சந்திரன், 'தன் மூத்த மகள் வீடு கட்டி வருகிறார். அவருக்கு உதவ வேண்டுமென்றும் இளையமகள் அனிதாவை நன்கு படிக்க வைக்க வேண்டுமென்பதும் தன் விருப்பம்' கூறியுள்ளார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Kerala woman honestly gave it to the lottery ticket holders | Tamil Nadu News.