வெளியான 'பும்ரா' - 'சஞ்சனா' திருமண வீடியோ... "அட அட, எங்க கண்ணே பட்டுரும் போலயே.." மெய்சிலிரித்து போன 'நெட்டிசன்கள்'!! - செம 'வைரல்'!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Ajith | Mar 23, 2021 04:25 PM

இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரிட் பும்ரா (Jasprit Bumrah), இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரின் பாதியில் இருந்து விலகியிருந்த நிலையில், விளையாட்டு தொகுப்பாளர் சஞ்சனா கணேஷனை (Sanjana Ganesan) திருமணம் செய்து கொண்டு, அனைவருக்கும் இன்ப அதிர்ச்சி அளித்திருந்தார்.

bumrah - sanjana wedding video gone viral on social media

தனக்கு திருமணம் என்பதால் தான், பும்ரா தொடரில் இருந்து விலகியதாக தகவல் பரவி வந்த நிலையில், பும்ரா தரப்பில் இருந்து, உறுதியான தகவல் எதுவும் வெளிவரவில்லை.

bumrah - sanjana wedding video gone viral on social media

இதனையடுத்து, சஞ்சனா கணேசனுடன் நடந்த திருமணம் தொடர்பான புகைப்படங்களை தனது சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து, தன்னை குறித்து வலம் வந்த செய்திகள் உண்மை என்பதை பும்ரா அறிவித்தார்.

bumrah - sanjana wedding video gone viral on social media

இதனைத் தொடர்ந்து, காதல் ஜோடிகளின் திருமண புகைப்படங்கள் நெட்டிசன்களிடையே அதிகம் வைரலானது. பல கிரிக்கெட் பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள், இந்த ஜோடிக்கு தொடர்ந்து வாழ்த்துக்களைத் தெரிவித்து வரும் நிலையில், தற்போது இவர்களின் திருமண நிகழ்ச்சி தொடர்பான வீடியோக்களும் வெளியாகி, மீண்டும் அதிக லைக்குகளை அள்ளி வருகிறது.

bumrah - sanjana wedding video gone viral on social media

 

கோவாவில் வைத்து நடந்த பும்ரா - சஞ்சனா திருமணம், முழுக்க முழுக்க பஞ்சாபி ஸ்டைலில் தான் நிகழ்ந்திருந்தது. மிகவும் சிறப்பான ஜோடிக்கு, ரசிகர்கள் தங்களது அன்பையும், வாழ்த்துக்களையும் வெளிப்படுத்தி வருவதையடுத்து, இந்த வீடியோவும் அதிகம் வைரலாகி வருகிறது.

 

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Bumrah - sanjana wedding video gone viral on social media | Sports News.