'அந்த வெற்றிடத்தை'.. 'இந்த காற்று நிரப்பி பல நாளாச்சு!'.. ரஜினி பேச்சுக்கு துரைமுருகன் பதில்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்By Siva Sankar | Nov 08, 2019 01:59 PM
தமிழகத்தில் ஆளுமை மிக்க தலைமைக்கு வெற்றிடம் இருப்பதாக நடிகர் ரஜினிகாந்த் இன்று கூறியுள்ள நிலையில், இதனையடுத்து திமுக பொருளாளர் துரைமுருகன் இந்த கருத்துக்கு வினையாற்றியுள்ளார்.
அதன்படி பத்திரிகையாளர்களிடம் பேசிய துரைமுருகன், வெற்றிடத்தை காற்று நிரப்பிவிடும் என்பது விஞ்ஞானம் என்றும் தமிழகத்தில் ஏற்பட்ட வெற்றிடத்தை ஸ்டாலின் என்கிற காற்று ஏற்கனவே நிரப்பி பலநாட்கள் ஆகிவிட்டதாகவும் பேசியுள்ளார்.
மேலும் நடிகர் ரஜினிகாந்த், நேரடியாக அரசியலுக்கு வந்தால் அதை உணர்வார் என்றும் துரைமுருகன் குறிப்பிட்டுள்ளார்.
Tags : #RAJINIKANTH #DURAIMURUGAN