'கவர்ன்மெண்ட் 'தடை' பண்ணியிருக்கு' ... 'நீங்க குழி தோண்டி விக்குறீங்களோ?' ... ஊரடங்கில் சட்டவிரோதமாக சிக்கிய மதுபாட்டில்கள்!!
முகப்பு > செய்திகள் > தமிழகம்ஊரடங்கு உத்தரவினால் அனைத்து மதுக்கடைகளை மூடப்பட்ட நிலையில் தமிழகத்தில் மதுவுக்கு அடிமையான பலர் பல்வேறு விபரீதமான முடிவுகளை எடுத்து வருகின்றனர். இந்த முடிவுகள் அனைத்தும் அவர்களை மரணம் வரை கொண்டு செல்கிறது. மேலும் சிலர் மதுக்கடைகளுக்கு புகுந்து கொள்ளையிலும் ஈடுபட்டுள்ளனர்.

இன்னொரு அதிர்ச்சி தகவலாக, தூத்துக்குடி மாவட்டத்தின் காட்டுப்பகுதிகளில் குழிகளை அமைத்து அதில் மண்பானைகளை வைத்து மதுபாட்டில்களை பதுக்கி விற்பனை செய்து வந்த தகவல் போலீசார் விசாரணையில் கண்டறியப்பட்டது. இதனை நேரில் சென்று போலீசார் ஆய்வு செய்தனர். அப்போது நபர் ஒருவர் அந்த குழிக்குள் கைவிட்டு பல மது பாட்டில்களை வெளியில் எடுத்து வைத்தார். அதே போல சுமார் எட்டுக்கும் மேற்பட்ட குழிகள் தயார் செய்து சட்டவிரோத செயலில் ஈடுபட்டதும் அம்பலமானது. மேலும், மது பாட்டில்கள் தேவைப்படும் போது மட்டும் கடையை திறந்து மது பாட்டில்களை சட்ட விரோதமாக விற்பதாக கடையில் வேலை பார்க்கும் ஊழியர் ஒருவர் தெரிவித்துள்ளார். இதன் விலையும் பல மடங்கு அதிகமாக விற்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
மதுக்கடைகள் செயல்பட அரசு தடை விதித்த போதும் மக்கள் இதுபோன்ற சட்ட விரோதமான செயல்களில் ஈடுபட்டு வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
