'ஒரு வாய் சாப்பிடுறதுக்குள்ள...' 'திடீர்னு பைக்ல 5 பேர் வந்துருக்காங்க...' 'பசியோட இருந்தவங்கள...' குலை நடுங்க செய்யும் கொடூரம்...!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Issac | May 18, 2020 03:30 PM

காய்கறி வியாபாரம் செய்த வந்த தொழிலாளர்களில் ஒருவரை மர்ம நபர்கள் கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

A Vegetable dealer was killed by mysterious people

கொரோனா வைரஸ் பரவி வரும் சூழலில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட 12 மாவட்டங்களில் எந்த வித தளர்வும் இன்றி ஊரடங்கு பின்பற்றப்பட்டு வருகிறது.

இந்நிலையில் காஞ்சிபுரத்தில் பெரும்பாலான கடைகள் மூடப்பட்டுள்ளது. எனவே சந்தைகளில் காய்கறிகளை விற்கும் கிராமத்து மக்கள் நகரங்களுக்கு வந்து தள்ளுவண்டிகளிலும், மாட்டு வண்டிகளிலும் சிரமப்பட்டு விற்பனை செய்கின்றனர்.

இதேபோல் கிராமப்பகுதியை சேர்ந்த ஐந்துக்கும் மேற்பட்டவியாபாரிகள், காஞ்சிபுரம் கைலாசநாதர் கோவில் தெருவில் கைவிடப்பட்ட பாழடைந்த வீடு ஒன்றில் தங்கி காய்கறிகள் விற்று வந்தனர். நேற்று இரவு மது அருந்திய அவர்கள் சாப்பிட உட்கார்ந்துள்ளனர்.

அப்பொழுது இருசக்கர வாகனத்தில் வந்த 5 மர்ம நபர்கள் ஒரு வாய் உணவை சாப்பிட விடாமல் அங்கிருந்த அனைத்து காய்கறி வியாபாரிகளையும் தாக்கியுள்ளனர். இதில் சின்ன காஞ்சிபுரம் காவாங்கரை பகுதியை சேர்ந்த ரஜினி(35) என்பவர் கொலை செய்யப்பட்டார். மேலும் நொண்டி முனியாண்டி பலத்த காயமடைந்து மயங்கிய நிலையில் இருந்துள்ளார். 

இன்று காலை தான் கொலை செய்யப்பட்ட ரஜினியின் உடலை அப்பகுதி மக்கள் கண்டுள்ளனர். தகவல் அறிந்த சிவகாஞ்சி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து ரஜினியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். படுகாயமடைந்த நொண்டி முனியாண்டியை மீட்டு காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்

மேலும், கொலை மற்றும் தாக்குதல் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றார்கள். பொருளாதாரத்திற்காகவும், வியாபாரத்திற்காகவும் சொந்த ஊருக்குள்ளையே இடம்பெயர்ந்த வியாபாரிகளுக்கு நடந்த இந்த சம்பவம் அப்பகுதி மக்களை அச்சத்திலும் அதிர்ச்சியிலும் ஆழ்த்தியுள்ளது.

Tags : #VEGETABLE