‘கட்சி நிகழ்வுக்கு பின் MLA பூங்கோதைக்கு நடந்தது என்ன ?’.. ‘மேல் சிகிச்சைக்காக சென்னை மருத்துவமனை அழைத்து வரப்பட்டாரா?’
முகப்பு > செய்திகள் > தமிழகம்நெல்லையில் ஷிபா மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த திமுக எம்.எல்.ஏ பூங்கோதை ஆலடி அருணா மேல் சிகிச்சைக்காக சென்னை அழைத்து வரப்பட்டுள்ளார்.

ஆலங்குளம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட ஒன்றியத்தில் நடந்த திமுக கமிட்டி கூட்டத்தில் கலந்துகொள்ள அந்த தொகுதி எம்.எல்.ஏ பூங்கோதைக்கு எதிராக சிலர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகவும், அந்த கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக, அந்த இடத்தில் பூங்கோதை தர்ணாவில் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது.
இதனை அடுத்து அன்று இரவே வீடு திரும்பிய அவர்,நெல்லை சந்திப்பு பகுதியில் உள்ள மருத்துவமனையில் சுய நினைவின்றி அனுமதிக்கப்பட்டதாக தெரிகிறது. ஆனால் மாலையில் உடல் நலம் தேறி தீவிர கண்காணிப்பில் அவரை மருத்துவர்கள் கண்காணித்து வந்ததாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில் மேல் சிகிச்சைக்காக ஆம்புலன்சில் தூத்துக்குடி விமானம் நிலையம் கொண்டுவரப்பட்டு, அங்கிருந்து சென்னை அப்போலோ மருத்துவமனைக்கு அழைத்துவரப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மற்ற செய்திகள்
