“ZOOM செயலிய கண்டுபிடிச்சவங்க... திமுக தலைவர் ஸ்டாலினுக்கு ராயல்டி தரணும்” - ‘காரணம் இதுதான்!’.. உதயநிதி ஸ்டாலின்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்ஜூம் செயலியை கண்டுபிடித்தவர்கள் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு ராயல்டி கொடுக்க வேண்டும் என்று திமுக பொதுக்குழு இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

வீடியோ கான்பரன்சிங் மூலம் திமுக பொதுக்குழு கூட்டத்தை நடத்தியதை அடுத்து, இதில் பங்கேற்று பேசிய உதயநிதி ஸ்டாலின், “திமுக தலைவர் ஸ்டாலினுக்கு ஜூம் செயலியை கண்டுபிடித்தவர்கள் ராயல்டி கொடுக்க வேண்டும். ஏனென்றால் ஜூமிலேயே பொதுக்குழுவை நடத்தி முடித்துள்ளார் நம் தலைவர்” என்று குறிப்பிட்டுள்ளார்.
கொரோனா காலத்திலும் ஆக்டிவாக களத்திற்கு செல்லாமலேயே பணியாற்ற, ஜூம் செயலி ஸ்டாலினுக்கு உதவி அளித்து வருவதாகவும் கடந்த சில மாதங்களாக, தானும் ஜூம் அப்ளிகேஷனை பயன்படுத்தி கள நிலவரத்தை அறிந்து கொள்வதாகவும் தெரிவித்துள்ள உதயநிதி ஸ்டாலின், யாரிடம் பேசினாலும் ஸ்டாலின் இப்போது ஜூம் ஆப்பில் பேசி கள நிலவரத்தை அறிந்து அறிந்து கொள்வதாக குறிப்பிட்டுள்ளார்.
“நான் தலைவருடன் பேசியதில் இதுவரை 250 க்கும் மேற்பட்ட ஜூம் மீட்டிங்குகளில் அவர் பேசி உள்ளார் என்பதை அறிந்து கொண்டேன்” என்று உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மேலும் தலைமையின் கட்டளைக்கு இணங்கி பணியாற்ற இளைஞர் அணி காத்திருக்கிறது என்றும் அவர் தனது உரையில் குறிப்பிட்டுள்ளார்.

மற்ற செய்திகள்
