"அவரோட மருத்துவ செலவ நாங்க பாத்துக்குறோம்..." நடிகரின் 'உருக்கமான' கோரிக்கைக்கு,,.. 'உதவிக்கரம்' நீட்டிய 'எம்.எல்.ஏ'!!!
முகப்பு > செய்திகள் > தமிழகம்பாரதிராஜாவின் கிழக்கு சீமையிலே படம் தொடங்கி ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் அண்ணாத்த திரைப்படம் வரை கடந்த 25 ஆண்டுகளுக்கு மேலாக பல திரைப்படங்களில் சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்து வருபவர் நடிகர் தவசி.

இந்நிலையில், நடிகர் தவசிக்கு புற்றுநோய் ஏற்பட்டதாகவும், அவரே தனது மருத்துவ செலவிற்கு நிதியுதவி கேட்கும் வீடியோ ஒன்றும் இன்று அதிகம் வைரலானது. முன்னதாக, மருத்துவமனையில் அவருக்கு சிகிட்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் சிகிட்சைக்கு போதிய பணமில்லாமல் போனது.
இதனையடுத்து, திருப்பரங்குன்றம் திமுக சட்டமன்ற உறுப்பினரும், மருத்துவருமான சரவணன் தனது மருத்துவமனையில் நடிகர் தவசியை அனுமதித்து அவருக்கு இலவசமாக சிகிட்சையளிப்பதாக தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். தவசிக்கு புற்றுநோய் மிகவும் முற்றிய நிலையில் உள்ளதாகவும், அவரின் மருத்துவ செலவுகள் அனைத்தையும் தனது தொண்டு நிறுவனமே ஏற்றுக் கொண்டுள்ளது என்றும் சரவணன் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
நகைச்சுவை நடிகர் #Thavasi அவர்களுக்கு எங்களது மருத்துவமனையில் உணவுக்குழாயில் (Oesophageal stent) பொறுத்தியுள்ளோம்.
புற்றுநோய் மிகவும் முற்றிய நிலையில் உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்ட அவரின் மருத்துவ செலவுகள் அனைத்தையும் எங்களது சூர்யா தொண்டு நிறுவனத்தின் மூலம் ஏற்றுக்கொண்டோம். pic.twitter.com/sL4B5ZE8SE
— Dr.P.Saravanan MD.,MLA (@mdr_saravanan) November 16, 2020
எம்.எல்.ஏ சரவணனின் மனிதநேயமிக்க இந்த செயல் தற்போது மக்களிடையே அதிகம் பாராட்டைப் பெற்று வருகிறது.

மற்ற செய்திகள்
