‘திடீர் திருமணத்தில் கல்லூரி மாணவியை மணந்த அதிமுக MLA’.. “இப்டி ஏமாத்துவாருன்னு நெனைக்கல... என் பொண்ண மீட்டு குடுங்க"... - கதறி அழுத 'தந்தை'!!!
முகப்பு > செய்திகள் > தமிழகம்கள்ளக்குறிச்சி தொகுதியின் அதிமுக எம்.எல்.ஏ பிரபு, தனது காதலியை திருமணம் செய்திருந்தார். தனது குடும்பத்தார் முன்னிலையில் இந்த திருமணம் இன்று அதிகாலை நடைபெற்ற நிலையில், திருமணமான பெண்ணின் தந்தை, தனது மகளை கடத்தி திருமணம் நடைபெற்றதாக பரபரப்பு குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார்.

அந்த பெண்ணின் தந்தையும் கோவில் குருக்களுமான சுவாமிநாதன், தனது மகளை எம்.எல்.ஏ பிரபு, ஆசை வார்த்தைகள் கூறி அவரை திசை திருப்பி சில தினங்களுக்கு முன்பு தனது மகளை கடத்திச் சென்றதாக கூறி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
'எனது குடும்பத்தாருடன் பிரபு மிகவும் நட்பாக பழகி வந்தார். பிரபுவுக்கு தற்போது 39 வயதாகிறது. எனது மகளுக்கு 19 வயது தான் ஆகிறது. கல்லூரியில் இரண்டாமாண்டு படித்துக் கொண்டிருந்த எனது மகளை ஆசை வார்த்தை கூறி ஏமாற்றி கடத்திச் செல்வார் என நான் எதிர்பார்க்கவில்லை. நான் இந்த திருமணத்தில் சாதி பார்க்கவில்லை. ஆனால், வயது வித்தியாசம் என்று ஒன்று உண்டல்லவா?' என மிகவும் உருக்கத்துடன் பெண்ணின் தந்தை சுவாமிநாதன் பேசியுள்ளார்.
அதே போல, இந்த சம்பவத்தால் மனமுடைந்த சுவாமிநாதன் தற்கொலை செய்ய முயற்சி மேற்கொண்டதாகவும் தெரிகிறது. அவரை மீட்டு விசாரித்த போலீசார், இனிமேல் நான் தற்கொலை செய்து கொள்ளமாட்டேன் என சுவாமிநாதனிடம் இருந்து எழுதி வாங்கியுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றது. அதே போல, இந்த திருமணத்தை எதிர்த்து புகார் கொடுக்க முற்பட்டால் அதிகாரத்தின் காரணமாக தனக்கு மிரட்டல்கள் வருவதாகவும் சுவாமிநாதன் வருத்தத்துடன் குறிப்பிட்டுள்ளார்.

மற்ற செய்திகள்
