'பாஜகவில் இணைவாரா மு.க.அழகிரி'?... 'அவர் வந்தால்'... எல்.முருகன் அதிரடி!
முகப்பு > செய்திகள் > தமிழகம்மு.க. அழகிரி தனிக் கட்சி தொடங்குவது பற்றி தனது ஆதரவாளர்களிடையே விவாதித்து வருவதாகத் தகவல்கள் வெளியாகிய நிலையில், அவர் பாஜகவில் இணைய இருப்பதாகவும் தகவல்கள் பரவி வருகிறது.

தமிழக சட்டசபைத் தேர்தல் நெருங்கி வருவதால் தமிழக அரசியல் களம் சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளது. கட்சிகள் பலவும் தங்களின் தேர்தல் வியூகங்களை வகுக்க ஆரம்பித்துள்ள நிலையில், தமிழக சட்டசபையில் தங்களின் கட்சியினரை அமர வைத்து வைத்து விட வேண்டும் என்ற முனைப்பில் பாஜக காய்களை நகர்த்தி வருகிறது.
இந்த சூழ்நிலையில் நவம்பர் 21ஆம் தேதி மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சென்னை வரவுள்ளார். இது முக்கியத்துவம் வாய்ந்த பயணமாகக் கருதப்படுகிறது. இதனிடையே மு.க.அழகிரி பாஜகவில் இணைய இருப்பதாகத் தகவல்கள் பரவி வருகிறது. இதுகுறித்து பேசிய தமிழக பா.ஜனதா தலைவர் எல்.முருகன், மு.க.அழகிரி பாஜகவிற்கு வந்தால் வரவேற்போம் எனக் கூறியுள்ளார். அதே நேரத்தில் மு.க.அழகிரியுடன் இதுவரை பேச்சுவார்த்தை நடத்தவில்லை எனவும் அவர் விளக்கம் அளித்தார்.

மற்ற செய்திகள்
