சின்னப்பம்பட்டி TO சிட்னி.. ‘யார்க்கர்’ புயல் நடராஜன் கிட்ட பேசினேன்.. திமுக தலைவரின் ‘சர்ப்ரைஸ்’ வாழ்த்து..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇந்திய அணியில் இடம்பிடித்துள்ள தமிழக வீரர் நடராஜனுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணி வரும் நவம்பர் மாதம் 27ம் தேதி முதல் 2021 ஜனவரி 19ம் தேதி வரை ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் விளையாட உள்ளது. இந்தத் தொடரில் விளையாடும் வீரர்களின் பட்டியலை பிசிசிஐ சமீபத்தில் அறிவித்தது. ஆனால் அதில் இடம்பெற்ற பல்வேறு வீரர்கள் காயத்தால் அவதிப்பட்டு வருவதால், அணியில் திருத்தம் செய்யப்பட்டு புதிய வீரர்களின் பட்டியலை பிசிசிஐ நேற்று அறிவித்தது.
அதில் தமிழக வீரரும், சுழற்பந்துவீச்சாளருமான வருண்சக்கரவர்த்தி டி20 அணியில் சேர்க்கப்பட்டிருந்த நிலையில், தோள்பட்டை ஏற்பட்ட காயம் காரணமாக அவர் விலகியுள்ளார். அதனால் அவருக்கு பதிலாக தமிழக வேகப்பந்து வீச்சாளர் நடராஜன் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
சேலம் சின்னப்பம்பட்டியை சேர்ந்தவர் வேகப்பந்து வீச்சாளர் நடராஜன். ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்த இவர் நடப்பு ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக விளையாடி வருகிறார். துல்லியமான யார்க்கர் மற்றும் பந்துவீச்சின் மூலம் அனைவரையும் திரும்பி பார்க்க வைத்தவர். தற்போது நடராஜன் இந்திய அணியில் இடம்பிடித்திருப்பது தமிழக ரசிகர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இந்நிலையில் இந்திய கிரிக்கெட் அணியில் இடம் பெற்றுள்ள தமிழக வீரர் நடராஜனுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில், ‘இந்திய கிரிக்கெட் அணிக்குத் தேர்வாகியுள்ள சேலத்து யார்க்கர் புயல் நடராஜனுக்கு வாழ்த்துகளும், பாராட்டுகளும். நடராஜனுடன் பேசினேன். அவர் உயர்வுகளைப் பெறவும், வெற்றிகள் குவித்து, அணிக்கு பெருமை சேர்க்கவும் எனது விருப்பங்களைத் தெரிவித்தேன். அனைத்துக் கனவுகளும் நிறைவேறட்டும்’ என மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணிக்குத் தேர்வாகியுள்ள சேலத்து யார்க்கர் புயல் நடராஜனுக்கு வாழ்த்துகளும், பாராட்டுகளும்!@Natarajan_91 உடன் பேசினேன். அவர் உயர்வுகளைப் பெறவும், வெற்றிகள் குவித்து, அணிக்கு பெருமை சேர்க்கவும் எனது விருப்பங்களைத் தெரிவித்தேன்!
அனைத்துக் கனவுகளும் நிறைவேறட்டும்! pic.twitter.com/U2225yrSDH
— M.K.Stalin (@mkstalin) November 10, 2020

மற்ற செய்திகள்
