'சென்னையில் குறைய தொடங்கிய கொரோனா'... 'காரணம் என்ன'?... ராதாகிருஷ்ணன் அதிரடி விளக்கம்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்சென்னையில் கொரோனா பாதிப்பு குறையத் தொடங்கியதற்கான காரணம் குறித்து சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் விளக்கமளித்துள்ளார்.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 3,680 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,30,261 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் கொரோனா பாதித்த நபர்களின் மொத்த எண்ணிக்கை 74,969 ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில் சென்னையில் கொரோனா பாதிப்பு தற்போது குறையத் தொடங்கியுள்ளது.
இதுகுறித்து சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் இன்று செய்தியாளர்கள் சந்திப்பில் பேசினார், அப்போது அவர், “தமிழகத்தில் கொரோனாவை தடுக்க போர்க்கால அடிப்படையில் பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மருத்துவமனைகளில் படுக்கை வசதிகள் அதிகரிக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் பிளாஸ்மா வங்கி தொடங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும் சென்னையில் கொரோனா பாதிப்பு குறையத் தொடங்கியதற்கான காரணம் குறித்துப் பேசிய அவர், மக்கள் ஒத்துழைப்பு தந்ததால் சென்னையில் கொரோனா பாதிப்பு குறையத் தொடங்கியுள்ளது'' எனக் கூறியுள்ளார்.