திருமணமான பெண்கள்தான் ‘குறி’.. சிக்கிய இளைஞர்.. வெளியான ‘திடுக்கிடும்’ தகவல்..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்திருமணமான பெண்களை குறிவைத்து பாலியல் தொல்லை கொடுத்த இரண்டு நபர்கள் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தருமபுரி மாவட்டம் அரூர் பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் தனது கணவருடன் காவல்நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில், தருமபுரியை அடுத்துள்ள நூலஅள்ளி பகுதியை சேர்ந்த ரவி என்பவர் தனது செல்போனில் கடந்த 3 நாட்களாக தொடர்புகொண்டு ஆபாசமாக பேசுவதாகவும், ராங் நம்பர் என கட் செய்தாலும் மீண்டும் மீண்டும் போன் செய்தும், வாட்ஸ் அப்பில் ஆபாச மேசேஜ்கள் அனுப்பியும் தொல்லை தருவதாக குறிப்பிட்டுள்ளார்.
இதற்கிடையில் ரவியின் தொல்லையால் கோபமடைந்த பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவர், தனது நண்பர்களினின் உதவியுடன் ரவியின் முகவரியை கண்டுபிடித்து நேரில் சென்று தர்ம அடி கொடுத்துள்ளனர். அப்போது ரவியின் செல்போனை ஆய்வு செய்தபோது, அவரும் அவருடைய நண்பர் நரசிம்மன் என்பரும் பெண்களுடன் சேர்ந்து இருக்கும் ஏராளமான புகைப்படங்கள் இருந்துள்ளன.
பேஸ்புக்கில் தருமபுரியை சேர்ந்த திருமணமான பெண்களின் புகைப்படம் இருந்தால், அதிலுள்ள செல்போன் எண்ணை தொடர்பு கொண்டு பேசுவதை இருவரும் வழக்கமாக கொண்டுள்ளனர். அப்போது அவர்களுடன் செல்போனில் பேசும் பெண்களின் உரையாடல்கள் மற்றும் போட்டோக்களை வைத்துக்கொண்டு ஆசைக்கு இணங்க மிரட்டி வந்தது தெரியவந்துள்ளது.
பாதிக்கப்பட்ட பெண் கொடுத்த புகாரின் அடிப்படையில் ரவி மற்றும் அவரது நண்பர் நரசிம்மனை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இவர்களால் பாதிக்கப்பட்ட மற்றொரு தர்மபுரி பெண் கடந்த 12ம் தேதி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதன் அடிப்படையில் ரவியின் செல்போனை தொடர்பு கொண்டு காவல்துறை அதிகாரி ஒருவர் விசாரித்துள்ளார்.
ஆனால், அப்போது தான் வேலூரை சேர்ந்த விஜய் என்றும், தனது தோழி சிம்ரனுக்கு போன் செய்தேன் என்றும் அப்பாவி போல கூறி தப்பியது தெரியவந்துள்ளது. திருமணமான பெண்களை குறிவைத்து செல்போனில் பாலியல் தொல்லை கொடுத்து வந்த இரு நபர்கள் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மற்ற செய்திகள்
