‘நெஞ்சை பிழிந்த பிளிறல் சத்தம்!’.. இளைஞர் படையுடன் கைகோர்த்து யானையை மீட்ட காவல் படை! .. 15 மணி நேரம் என்ன நடந்தது?
முகப்பு > செய்திகள் > தமிழகம்தருமபுரி பாலக்கோடு அருகே பஞ்சபள்ளி சின்னாறு அணையை அடுத்த ஏலகுண்டூரில், தண்ணீர் இல்லாத கிணற்றில் பெண் யானை தவறி விழுந்தது.

யானையின் நெஞ்சை உருக்கும் பிளிறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் வந்தபோது, 50 அடி ஆழ கிணற்றுக்குள் யானை உயிருக்கு போராடிக் கொண்டிருக்க, வனத்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டு, யானையை மீட்கும் பணி தொடங்கியது.
கிணற்றின் முதல் 20 அடி மிகவும் அகலமாகவும், அடுத்த 30 அடி குறுகிய அகலம் கொண்டதாகவும் இருந்ததால் யானையை மீட்க சிரமமாகிடது. எனினும், நூற்றுக்கணக்கான மக்கள் கூட்டம் குவிந்தது. சில இளைஞர்கள் மீட்புப்படையினருக்கு உதவியதுடன், கிணற்றில் இறங்கி யானையை கட்டி கிரேன் மூலம் தூக்கும் சவாலான பணியை செய்து யானையை மீட்டுள்ளனர்.
உயிருடனும், துடிப்புடனும் இருந்ததால், யானைக்கு 2 மயக்க ஊசி செலுத்தப்பட்டு, யானை மயக்கம் அடைந்த பின்னர், கயிறு கட்டி கிரேன் மூலம் மேலே தூக்கிய வனத்துறையினர் மற்றும் தீயணைப்பு வீரர்கள்15 மணி நேர போராட்டத்திற்குப் பின் யானையை உயிருடன் மீட்டனர்.

மற்ற செய்திகள்
