இதுல இவ்ளோ விஷயம் இருக்கா?.. 'வாட்ஸ் ஆப்பின் புதிய அம்சம் அறிமுகம்!'.. முழு விபரம்!
முகப்பு > செய்திகள் > இந்தியாவாட்ஸ் ஆப்பில் அனுப்பப்பட்ட குறுஞ்செய்திகள் 7 நாட்களில் தானாக மறைந்துவிடும் அல்லது டெலிட் ஆகிவிடும் அம்சத்தை தற்போது வாட்ஸ் ஆப் அறிமுகம் செய்துள்ளது.

இதுபற்றி, ஃபேஸ்புக் தனது பக்கத்தில், வாட்ஸ் ஆப்பின் தனிப்பட்ட செய்தி மற்றும் குரூப்புகளிலும் இந்த அம்சத்தை பயன்படுத்தலாம் என என்றும், அதே சமயம், இந்த அம்சத்தை பயன்படுத்துவதற்கு முன்பு அனுப்பப்பட்ட மற்றும் முன்னரே பெறப்பட்ட செய்திகளை இந்த அம்சம் எந்த விதத்திலும் பாதிக்காது எனவும் அந்த நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
இதேபோல்,பயனர் ஒரு தனிப்பட்ட சாட்டிற்கு மட்டும் இந்த அம்சத்தை பயன்படுத்திக் கொள்ளலாம். குரூப் செய்திகளுக்கு, இந்த அம்சத்தை அட்மின் மட்டுமே பயன்படுத்த முடியும். எனவே 7 நாட்கள் தங்கள் வாட்ஸ் அப்பை ஒரு பயனர் பயன்படுத்தவில்லை என்றால், அந்த செய்தி அழிந்துவிடும். எது எப்படியோ அந்த செய்தி நோட்டிஃபிகேஷனில் காண்பிக்கப்படலாம் என்று அந்நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
அத்துடன் disappearing messages என சொல்லப்படும், செய்திகள் தானாக மறையும் அம்சத்தை ஆன் செய்யும்போது, ஆட்டோ -டவுன்லோட் ஆனில் இருந்தால், செய்திகள் அழிந்தாலும், புகைப்படங்கள் மட்டும் போனில் டவுன்லோட் ஆகி விடும். ஆனால் செய்திகள் மறைக்கப்படும் அம்சம் ஆன் செய்யப்பட்டிருக்கும் ஒரு சாட்டிலிருந்து, அதே அம்சம் ஆன் செய்யப்படாத மற்றொரு சாட்டிற்கு ஒரு செய்தியை பகிர்ந்தால், அந்த செய்தி அப்படியே இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மற்ற செய்திகள்
