'நான் ஒரு அமெரிக்க பொண்ணு...' 'பேஸ்புக் மெசஞ்சர்ல டெய்லி சாட்...' 'போட்ட ப்ளான் சக்சஸ்...' - நம்பி எல்லாம் செய்தவருக்கு பேக் ஐடி கொடுத்த ஷாக்...!
முகப்பு > செய்திகள் > தமிழகம்மர்மநபர் ஒருவர் அமெரிக்கப்பெண் என முகநூல் மூலம் பேசி ராமநாதபுரத்தை சேர்ந்த இளைஞரிடம் மூன்றரை லட்ச ரூபாய் பணத்தை சுருட்டியுள்ளார்.

ராமநாதபுரத்தை சேர்ந்த சிவஹரி என்னும் இளைஞர் குவைத்தில் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இந்நிலையில் சிவஹரிக்கு பேஸ்புக்கில் கிளாரா என்ற பெண்ணுடன் நட்பு ஏற்பட்டுள்ளது.
நீண்ட நாட்கள் மெசஞ்சரில் தொடர்ந்த நட்பால் கிளாரா, தன் தந்தைக்கு சிறுநீரக அறுவை சிகிச்சைக்கு பணம் தந்து உதவுமாறும், அவரை சென்னையில் தான் சேர்த்துள்ளதாகவும் கூறியுள்ளார். இதை நம்பிய சிவஹரி, ஆன்லைன் மூலம் 4 தவணைகளாக சுமார் 3 1/2 லட்சம் பணத்தை அனுப்பியுள்ளார்.
மேலும் பணம் கைக்கு வந்தததும் கிளாரா தனது பேஸ்புக் பக்கத்தை பிளாக் செய்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த சிவஹரி தான் ஏமாற்றப்பட்டுவிட்டோம் என உணர்ந்து, தமிழக டிஜிபிக்கு ஆன்லைனில் புகார் அனுப்பியுள்ளார். புகாரின் அடிப்படையில், இராமநாதபுரம் எஸ்.பி உத்தரவின்பேரில், சைபர் கிரைம் போலீசார் வழக்குப் பதிந்து, அமெரிக்க பெண் போல் பழகி மோசடி செய்தவரை தேடி வருகின்றனர்.

மற்ற செய்திகள்
