‘கடவுளின் தேசத்தில் இப்படி ஒரு காட்சியா?’.. ‘வெள்ளத்தில் அடித்துச் செல்லப்படும் யானையின் சடலம்!’.. இதயத்தை நொறுக்கும் வீடியோ!
முகப்பு > செய்திகள் > இந்தியாகேரளாவில் பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில், சில மாவட்டங்களில் வெள்ளம் போன்ற நிலை உண்டாகியுள்ளது.
தொடர்ந்து பொழியும் மழையால் இதுவரை கேரளாவில் 5 பேர் பலியாகியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதுமட்டுமல்லாமல் 2 ஆயிரம் பேர் பாதுகாப்பாகவும் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். சில மாவட்டங்களில் ஆரஞ்சு அலெர்ட்டும் மற்றும் வெள்ளப்பெருக்கு அபாயம் உள்ள மாவட்டங்களில் ரெட் அலர்ட்டும் விடுக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் பெரியார் ஆற்றில் பெருக்கெத்து ஓடும் வெள்ளத்தில் காட்டு யானை சடலமாக அடித்துச் செல்லப்படும் வீடியோ ஒன்று வெளியாகி இந்தியர்களின் இதயத்தை நொறுக்கி வருகிறது. கேரளாவின் எர்ணாகுளம் மாவட்டம் நேரியமங்கலம் பாலத்தின் அருகே பெருக்கெடுத்து ஓடும் வெள்ளத்தில் யானையின்
#KeralaRains elephant being swept away in Periyar river, Idukki Kerala @IndianExpress pic.twitter.com/9EhkUxE8gp
— shaju philip (@shajuexpress) August 6, 2020
சடலம் அடித்துச் செல்லப்படும் இந்த காட்சி பதிவு செய்யப்பட்டுள்ளது.