இப்போ வர மாட்டயா?.. பாகனுக்கு ‘பதில்’ சொன்ன ஸ்ரீரங்கம் ஆண்டாள் யானை.. ஆச்சரியப்பட வைத்த வீடியோ..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Selvakumar | Nov 13, 2020 02:46 PM

ஸ்ரீரங்கம் கோவில் ஆண்டாள் யானை, பாகனுடன் செல்லமாக அடம்பிடித்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

Srirangam temple andal elephant talking to Bhagan Rajesh

திருச்சி ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோவிலை சேர்ந்த யானை ஆண்டாள். இந்த யானை தனது குறும்பு செயல்கள் மூலம் பகர்தர்களை கவர்ந்து வருகிறது. தற்போது சாலையில் பாகனுடன் நடந்து செல்லும் போது வரமாட்டேன் என செல்லமாக அடம்பிடித்த வீடியோ வெளியாகி காண்போரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

Srirangam temple andal elephant talking to Bhagan Rajesh

கடந்த 1986ம் ஆண்டு ஸ்ரீரங்கம் கோவிலுக்கு ஆண்டாள் யானை கொண்டு வரப்பட்டது. கடந்த 34 ஆண்டுகளாக கோவில் திருப்பணிகளை ஆண்டாள் யானை சிறப்பாக செய்து வருகிறது. நவராத்தி விழாக்களில் ஆண்டாளின் பங்களிப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும். அப்போது சுறுசுறுப்புடன் காணப்படும் ஆண்டாள், ஆர்கன் வாசிப்பது, சலங்கை அணிந்து ஒற்றை காலில் நொண்டி அடிப்பது என பல அறிய செயல்களை செய்து பக்தர்களை கவர்ந்துவிடும்.

பொதுவாக யானை பாகன்கள் தாங்கள் வளர்க்கும் யானைகளுக்கு மலையாளத்தில்தான் உத்தரவுகளை பிறப்பிப்பார்கள். ஆனால் ஆண்டாளிடம் பாகன் ராஜேஷ் தமிழிலேயே பேசுகிறார். அவர் கேட்கும் கேள்விகளுக்கு ஆம், இல்லை என தனது உடல் அசைவுகளின் மூலம் பதிலளிக்கிறது.

இந்தநிலையில் பாகன் ராஜேஷுடன் சாலையில் நடந்து வரும்போது ஆண்டாள் யானை வரமாட்டேன் என செல்லமாக அடம்பிடித்தது. உடனே பாகன் வர மாட்டயா? என கேட்க, அதற்கு வரமாட்டேன் என தனக்கே உரிய பாணியில் பதில் அளித்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. பாகனின் கேள்விகளுக்கு செல்லமாக பதில் கூறும் ஆண்டாள் யானையின் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Srirangam temple andal elephant talking to Bhagan Rajesh | Tamil Nadu News.