'கொரோனா வைரஸின் பிடியில் சிக்காமல்'... 'உலகையே வியப்பில் ஆழ்த்தியுள்ள நாடுகள் இவைகள் தான்'!
முகப்பு > செய்திகள் > உலகம்கொரோனா வைரஸால் பல்லாயிரக்கணக்கான பேர் உயிரிழந்து, நாளுக்கு நாள் உலகையே அச்சுறுத்தி வரும் நிலையில், அந்த வைரஸால் ஒருவர் கூட பாதிக்கப்படாத நாடுகளும் உள்ளது அனைவரையும் ஆச்சரியத்தில் மூழ்கடித்துள்ளது.

வடக்கு பசிபிக் கடற்பகுதியில் பலாவ் மொழிபேசும், சுமார் 18,000 மக்கள் தொகை கொண்ட சின்னஞ்சிறு நாடு பலாவ் தீவுகள் குடியரசு. இந்த நாட்டில் இதுவரை ஒருவருக்கு கூட கொரோனா தொற்று பாதிப்பு ஏற்படவில்லை. இந்த நாட்டின் நாணயம் அமெரிக்க டாலர் ஆகும். இத்தனைக்கும் பசிபிக் பிராந்திய நாடுகள் பலவரும் கொரோனாவின் கொடூர தாக்கத்தில் சிக்கி இருக்கின்றன.
இதேபோல் சுமார் 1 லட்சம் பேரை மக்கள் தொகையாக கொண்ட குட்டிநாடான டோங்காவும் கொரோனாவின் பிடியில் சிக்கவில்லை. மேலும் சாலமன் தீவுகள், மார்ஷல் தீவுகள், மைக்ரோனேசியா ஆகிய நாடுகளும் கொரோனா தாக்காத நாடுகளாகும். இவைதவிர அண்டார்டிகா கண்டமும் கொரோனாவால் பாதிக்கப்படவில்லை. அதேநேரத்தில் பசிபிக் கடலில் உள்ள வடக்கு மரியானா தீவுகள் நாடுகளில் முதலாவது கொரோனா பாதிப்பு அண்மையில் உறுதி செய்யப்பட்டிருக்கிறது. பயணக் கட்டுப்பாடுகள் நிறைந்து இருப்பதால் தான் இந்தப் பகுதிகளில் எல்லாம் கொரோனா பரவவில்லை என்று கூறப்படுகிறது.
