அரசியலுக்கு வருவாரா...? வரமாட்டாரா...? 'குழப்பம் நீடிக்கும் நிலையில்...' 'ரஜினி-குருமூர்த்தி திடீர் சந்திப்பு...' - 2 மணி நேரமாக ஆலோசனை...!
முகப்பு > செய்திகள் > தமிழகம்தன் ஸ்டைலிஷ் நடிப்பால் தமிழ் திரைப்பட உலகில் சூப்பர் ஸ்டாராக விளங்குபவர் திரு.ரஜினிகாந்த்.

பல வருடங்களாக ஆண்டவன் சொல்லும் போது அரசியலுக்கு வருவேன் என்று சொன்ன ரஜினிகாந்த் கடந்த 2017-ஆம் ஆண்டு வெளிப்படையாக சிஸ்டம் சரியில்லை அரசியலுக்கு வருகிறேன், கட்சியின் கொள்கை, சின்னம் போன்றவை 2021-ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலின் போது அறிவிப்பேன் என்று கூறியிருந்தார்.
மேலும் தற்போது 2021-ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் வரும் நிலையில் 2020-ஆம் ஆண்டு முழுதும் கொரோனவுடன் நிறைவடைய உள்ளது. இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் ரஜினி வெளியிட்டது போல ஒரு கடிதம் இணையத்தில் வைரலானது.
அக்கடிதம் குறித்து விளக்கமளித்துள்ள ரஜினிகாந்த் அவர்கள், 'அக்கடிதம் நான் எழுதிய கடிதம் இல்லை. ஆனால் அதில் தனக்கு சிறுநீரக அறுவை சிகிச்சை செய்யப்பட்டிருப்பதாக குறிப்பிடப்பட்ட தகவல் உண்மை தான்' எனவும் குறிப்பிட்டிருந்தார்.
அவரின் இந்த விளக்கத்தையடுத்து ரஜினிகாந்த் அரசியலில் இருந்து விலகி விட்டதாக அரசியல் விமர்சகர்கள் பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் சென்னை போயஸ் இல்லத்தில் நடிகர் ரஜினியுடன் துக்ளக் ஆசிரியர் ஆடிட்டர் குருமூர்த்தி 2 மணி நேரமாக ஆலோசனை நடத்தி வருகிறார் எனவும், நடிகர் ரஜினி உடல் நலம் பற்றியும், இன்றைய அரசியல் சூழல், அரசியல் செயல்திட்டம் குறித்து விவாதித்து வருவதாக தகவல்கள் வெளிவந்துக் கொண்டிருக்கின்றன.

மற்ற செய்திகள்
