"6 பந்தில் 6 சிக்ஸ்".. அரங்கையே திருப்பி பார்க்க வெச்ச கிரிக்கெட் வீரர்.. அடிச்சு முடிச்சதும் நடந்த வைரல் சம்பவம்!!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Ajith Kumar V | Feb 06, 2023 11:40 AM

கிரிக்கெட் போட்டிகளை காண உலகெங்கிலும் பல இடங்களில் ரசிகர்கள் உள்ளனர். இதன் காரணாமாக, உலகை சுற்றி நடைபெறும் பல்வேறு போட்டிகள் பெரிய அளவில் கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பேசப்படும்.

Iftikhar Ahmed smashes six sixes in one over by wahab riaz

                         Images are subject to © copyright to their respective owners.

Also Read | கிரவுண்ட்ல திடீர்னு கேட்ட பயங்கர சத்தம்.. உடனே வெளியேற்றப்பட்ட வீரர்கள்.. PSL போட்டியின் போது நடந்த அதிர்ச்சி சம்பவம்..!

அதே போல, கிரிக்கெட்டில் நடைபெறும் அசத்தலான சம்பவங்கள் குறித்த வீடியோக்களும் வைரலாகும். அந்த வகையில், ஒரு வீடியோ குறித்த செய்தி தான் கிரிக்கெட் ரசிகர்களை வியப்படைய வைத்துள்ளது.

இந்தியாவில், டி 20 லீக் தொடரான ஐபிஎல் போட்டிகள் நடைபெறுவது போல, பாகிஸ்தானில் ஆண்டு தோறும் பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடர் நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டுக்கான தொடர் விரைவில் ஆரம்பமாக உள்ள சூழலில், மொத்தம் 6 அணிகள் விளையாட உள்ளது.

Iftikhar Ahmed smashes six sixes in one over by wahab riaz

Images are subject to © copyright to their respective owners.

இந்நிலையில், இந்த தொடர் தொடங்குவதற்கு முன்பாக பயிற்சி ஆட்டம் நடைபெற்றிருந்தது. இந்த போட்டியில்,  குவெத்தா கிளாடியேட்டர் மற்றும் பெஷாவர் ஷல்மி ஆகிய அணிகள் மோதி இருந்தது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த குவெட்டா கிளாடியேட்டர்ஸ் அணி, 20 ஓவர்கள் முடிவில் 184 ரன்கள் எடுத்திருந்தது. தொடர்ந்து, இலக்கை நோக்கி ஆடிய பெஷாவர் ஷல்மி அணி, 20 ஓவர்களில் 181 ரன்கள் மட்டுமே எடுக்க, குவெட்டா அணி 3 ரன்கள் வித்தியாயசத்தில் வெற்றி பெற்றிருந்தது,

Iftikhar Ahmed smashes six sixes in one over by wahab riaz

Images are subject to © copyright to their respective owners.

முன்னதாக, இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த குவெட்டா அணி, 19 ஓவர்களில் 148 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது. அப்போது களத்தில் இருந்த இப்திகார் அகமது, 44 பந்துகளில் 58 ரன்கள் எடுத்திருந்தார். தொடர்ந்து இறுதி ஓவரில், வேகப்பந்து வீச்சாளர் வாஹப் ரியாஸ் பந்தை எதிர்கொண்ட இப்திகார் அகமது, 6 பந்துகளையும் சிக்ஸர்களாக மாற்றி, 50 பந்துகளில் 94 ரன்கள் சேர்த்திருந்தார். இதனால், குவெட்டா அணியும் சிறந்த ஸ்கோரை எட்டி இருந்தது.

Iftikhar Ahmed smashes six sixes in one over by wahab riaz

Images are subject to © copyright to their respective owners.

இதனைத் தொடர்ந்து, சிக்ஸர்கள் அடித்த பின்னர் வாஹப் ரியாஸ் மற்றும் இப்திகார் அகமது இது தொடர்பாக உரையாடி இருந்தனர். அப்போது, என்னவாக இருந்தாலும் 6 சிக்ஸர்கள் அடிப்பது என்பது மிகப் பெரிய விஷயம் என்றும் இப்திகாரை குறிப்பிட்டு வாஹப் ரியாஸ் பேசி உள்ளார்.

Also Read | "பாக்க கல்யாண டிரஸ் மாதிரி இருக்கும், ஆனா உண்மையில".. கின்னஸ் வரைக்கும் போன சம்பவம்!!..

Tags : #CRICKET #IFTIKHAR AHMED #IFTIKHAR AHMED SMASHES SIX SIXES #WAHAB RIAZ #PAKISTAN SUPER LEAGUE

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Iftikhar Ahmed smashes six sixes in one over by wahab riaz | Sports News.