பிரபல தொழிலதிபருக்கு நடிகர் அமிதாப் பச்சன் கொடுத்த சர்ப்ரைஸ்.. வைரல் போஸ்ட்..!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Madhavan P | Feb 06, 2023 11:15 AM

இந்திய டாப் பணக்காரர்களில் ஒருவரும் தொழிலதிபருமான ஹர்ஷ் கோயங்கா-வின் சமீபத்திய ட்விட்டர் பதிவு ஒன்று நெட்டிசன்கள் பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

Amitabh Bachchan send a letter to Businessman Harsh Goenka

                            Images are subject to © copyright to their respective owners.

Also Read | கிரவுண்ட்ல திடீர்னு கேட்ட பயங்கர சத்தம்.. உடனே வெளியேற்றப்பட்ட வீரர்கள்.. PSL போட்டியின் போது நடந்த அதிர்ச்சி சம்பவம்..!

இந்திய பணக்காரர்களுள் ஒருவரும் RPG குழுமத்தின் தலைவருமான ஹர்ஷ் வர்தன் கோயங்கா ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலை தளங்களில் துடிப்புடன் இயங்கி வருபவர்.  1957 ஆம் ஆண்டு கொல்கத்தாவில் பிறந்த கோயங்கா, அங்கேயே பள்ளி மற்றும் கல்லூரி படிப்பையும் முடித்திருக்கிறார். கொல்கத்தாவின் செயின்ட் சேவியர் கல்லூரியில் பொருளாதாரம் படித்த கோயங்கா அதைத் தொடர்ந்து, ஸ்விட்சர்லாந்தில் MBA படித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர் தனது ட்விட்டர் பக்கத்தில் தன்னம்பிக்கை அளிக்கக்கூடிய, நகைச்சுவையான மற்றும் பல சுவாரஸ்யமான கருத்துக்களை பதிவிடுவது வழக்கம். இவை, சில நேரங்களில் நெட்டிசன்களிடையே மிகுந்த வரவேற்பையும் பெறும். அந்த வகையில் நடிகர் அமிதாப் பச்சன் குறித்து இவர் எழுதியுள்ள பதிவு ஒன்று தற்போது வைரலாகி வருகிறது.

Images are subject to © copyright to their respective owners.

இந்தி திரைப்பட உலகில் ஜாம்பவானாக கருதப்படுபவர் நடிகர் அமிதாப் பச்சன். இவருக்கு உலகம் முழுவதிலும் கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். அமிதாப் பச்சன் அண்மையில் தொழிலதிபர் ஹர்ஷ் கோயங்காவிற்கு கடிதம் ஒன்றை எழுதி இருக்கிறார். அந்த கடிதத்தில் தனது தந்தை ஹரிவனேஷ் ராய் பச்சனுடைய கவிதை வரிகளை அமிதாப் குறிப்பிட்டு உள்ளார். இந்நிலையில் இந்த கடிதத்தை பெற்ற கோயங்கா தன்னுடைய மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.

Images are subject to © copyright to their respective owners.

இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில்,"இன்று சிறந்த மனிதரிடமிருந்து இந்த அன்பான வார்த்தைகளை பெற்றேன்" என குறிப்பிட்டு தனக்கு வந்த கடிதத்தின் ஒரு பகுதியையும் அவர் புகைப்படமாக பதிவிட்டுள்ளார். அதில் அமிதாப் பச்சன் கையொப்பமிட்டு கைப்பட கவிதை வரிகளை எழுதியிருக்கிறார். இந்நிலையில், இந்த பதிவு வைரலாக பரவிய நிலையில் நெட்டிசன்கள் பலரும் இது குறித்து கமெண்ட் செய்து வருகின்றனர். இதனிடையே இந்த போஸ்ட்டை 67,000க்கும் அதிகமானோர் பார்த்திருக்கின்றனர்.

Also Read | "பாக்க கல்யாண டிரஸ் மாதிரி இருக்கும், ஆனா உண்மையில".. கின்னஸ் வரைக்கும் போன சம்பவம்!!..

Tags : #AMITABH BACHCHAN #BUSINESSMAN #HARSH GOENKA #BUSINESSMAN HARSH GOENKA

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Amitabh Bachchan send a letter to Businessman Harsh Goenka | India News.