#BREAKING #VIDEO: 'இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு கொரோனா தொற்று!'... நாட்டு மக்களுக்கு உருக்கமான பதிவு!

முகப்பு > செய்திகள் > உலகம்

By Manishankar | Mar 27, 2020 05:47 PM

இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது.

UK PM Boris Johnson tests positive for covid19 with mild symptoms

உலக முழுவதையும் அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ், இங்கிலாந்தையும் விட்டுவைக்கவில்லை. அந்நாட்டில், 11 ஆயிரத்து 658 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், 578 பேர் பலியாகி உள்ளனர்.

இந்நிலையில், இங்கிலாந்து நாட்டின் பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து, தனது ட்விட்டர் பக்கத்தில் பிரதமர் போரிஸ் கூறியிருப்பதாவது, " கடந்த 24 மணி நேரமாக, எனக்கு சில கொரோனா அறிகுறிகள் இருந்தது. இதனால், நான் பரிசோதனை மேற்கொண்டபோது எனக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பது உறுதியானது.

இதனால், நான் என்னை சுய தனிமை படுத்திக்கொண்டேன். எனினும், காணொளி காட்சி மூலம் கொரோனாவுக்கு எதிரான தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதில் அரசாங்கத்தை வழிநடத்துவேன். நாம் ஒன்று சேர்ந்து கொரோனாவை வீழ்த்துவோம்" என்று பதிவிட்டுள்ளார்.

இதற்கிடையே, நேற்று முன்தினம் இங்கிலாந்து இளவரசர் சார்லஸுக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

 

 

Tags : #CORONA #CORONAVIRUS #UK #PM #BORIS