“சூரிய கிரகணத்தோடு கொரோனா செயலிழக்கும்...” "வரும் சூரிய கிரகணம் நமக்குத் திருப்பு முனையாக அமையும்" 'சென்னை' விஞ்ஞானியின் 'சுவாரஸ்யத் தகவல்...!'
முகப்பு > செய்திகள் > தமிழகம்கொரோனாவுக்கும் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நிகழ்ந்த சூரிய கிரகணத்திற்கும் தொடர்பு உள்ளதாக கூறி, சென்னையைச் சேர்ந்த விஞ்ஞானி ஒருவர் சில தகவல்களை வெளியிட்டுள்ளார்.

சென்னையைச் சேர்ந்தவர் சுந்தர் கிருஷ்ணன் என்பவர் அணு மற்றும் புவியியல் தொடர்பான ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறார். இவர் சமீபத்தில் ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டி ஒன்றில், கடந்த ஆண்டு இறுதியில் தோன்றிய சூரிய கிரகணத்தின்போது வெளியான ஆற்றல் காரணமாகப் அணுவில் பிளவு ஏற்பட்டு பரிணாம வளர்ச்சியில் கோவிட்-19 உருவாகியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
விஞ்ஞானி சுந்தர் கிருஷ்ணனின் இந்த அறிவிப்பு இப்போது பேசு பொருளாக மாறியுள்ளது. இதுகுறித்து அவர் அளித்த பேட்டியில், "கொரோனா வைரஸ் 2019ஆம் டிசம்பரில் தோன்றி, மனிதர்களை அச்சுறுத்தி வருகிறது. இதற்கிடையே நான் மேற்கொண்ட ஆய்வுகளில் கடந்த டிசம்பர் 26 அன்று தோன்றிய சூரிய கிரகணத்திற்குப் பிறகு நமது சூரியக் குடும்பத்தில் உள்ள கிரகங்கள் தம்மை மறு சீரமைத்துக் கொண்டிருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
"இந்த ஆற்றல் காரணமாக பூமியின் வலிமையும் மறுசீரமைக்கப்பட்டுள்ளது. இந்த மறுசீரமைப்பு காரணமாகப் பூமியின் மேல் பரப்பில் இந்த கொரோனா வைரஸ் தோன்றியிருக்கலாம்." என அவர் தெரிவித்துள்ளார்.
அந்த கிரகணத்தின்போது வெளியான ஆற்றல் காரணமாக ஏற்பட்ட அணு சேர்க்கைகள், மற்றும் பிளவு காரணமாக நியூக்ளியஸ் உருவாக்கம் தொடங்கியிருக்கலாம். இதன் மூலம் கொரோனா வைரசின் உயிர் மூலக்கூறு கட்டமைப்பின் பிறழ்வு நடந்திருக்க வாய்ப்புள்ளது. என அவர் தெரிவித்துள்ளார்.
அதே வேளையில் இந்த ஆய்வுகள் சரியாக இருந்தால், வரும் சூரிய கிரகணம் நமக்குத் திருப்புமுனையாக அமையும் எனக் கிருஷ்ணா கூறுகிறார். அதாவது ஜூன் 21ஆம் தேதி நிகழும் சூரிய கிரகணத்தின்போது சூரியனிலிருந்து வெளியாகும் ஆற்றல் வைரசைச் செயலிழக்கச் செய்துவிடும் எனக் கூறியுள்ளார். சூரிய ஒளியும், சூரிய கிரகணமும் இந்த வைரசிலிருந்து நம்மை பாதுகாக்கும் என்பதையும் விஞ்ஞானி கிருஷ்ணா பதிவு செய்திருந்தார்.

மற்ற செய்திகள்
