"இன்னும் என்ன தோழா!.. நாம் வெல்லத் தொடங்கிவிட்டோம்!".. இந்தியர்களுக்கு கொரோனா தரவுகள் சொன்ன செய்தி!
முகப்பு > செய்திகள் > இந்தியாஇந்தியாவில் கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 50 சதவீதம் அதிகரிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு, பொதுவெளியில் மக்கள் நடமாட்டம் அதிகரித்திருப்பதாலும், பரிசோதனைகளை அதிகரிப்பதாலும் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து உயர்கிறது. அதேசமயம் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை உயர்ந்து வருவது ஆறுதல் அளிப்பதாக உள்ளது.
இன்று காலை வெளியிடப்பட்டுள்ள தகவலின்படி, கடந்த 24 மணி நேரத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு 11,929 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3,20,922 ஆக அதிகரித்துள்ளது.
குணமடைந்தோர் எண்ணிக்கை 1,54,330-லிருந்து 1,62,379 ஆக உயர்ந்துள்ளது. உயிரிழந்தோர் எண்ணிக்கை 8,884-லிருந்து 9,195 ஆக அதிகரித்தள்ளது. 1,49,348 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில், இந்தியாவில் கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 50 சதவீதம் அதிகரிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 8,049 பேர் கொரோனா தொற்றிலிருந்து மீண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மற்ற செய்திகள்
