'கொரோனா பாதிப்பு மாவட்டங்களை'... '3 வண்ணங்களாக பிரித்து தமிழக அரசு பட்டியல் வெளியீடு'... கொரோனா பாதிக்காத மாவட்டங்கள் எத்தனை??

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Sangeetha | Apr 11, 2020 11:05 PM

தமிழகத்தில் இதுவரை மாவட்ட வாரியாக பாதிப்பு எண்ணிக்கை சாதாரணமாக வெளியிடப்பட்ட நிலையில், தற்போது மூன்று வண்ணங்களாக பிரித்துப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

Tamil Nadu 3 Colours District wise corona report updates

கொரோனா பாதிப்பின் தீவிரத்தை உணர்த்தும் வகையில், சிவப்பு, ஆரஞ்ச், மஞ்சள் ஆகிய மூன்று நிறங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.  அதன்படி,

1. சென்னை, கோவை, ஈரோடு, நெல்லை, திண்டுக்கல், நாமக்கல், செங்கல்பட்டு, தேனி, திருச்சி, ராணிப்பேட்டை, திருவள்ளூர், திருப்பூர், மதுரை, தூத்துக்குடி, நாகை, கரூர், விழுப்புரம் ஆகிய 17 மாவட்டங்கள் சிவப்பு வண்ணத்தில் அதாவது அதிக பாதிக்கப்பட்ட பகுதிகளாக குறிக்கப்பட்டுள்ளன.

2. திருப்பத்தூர், கடலூர், கன்னியாகுமரி, சேலம், திருவாரூர், விருதுநகர், தஞ்சை, திருவண்ணாமலை, வேலூர் ஆகிய 9 மாவட்டங்கள் ஆரஞ்சு வண்ணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளன.

3. நீலகிரி, காஞ்சி, சிவகங்கை, தென்காசி, கள்ளக்குறிச்சி, ராமநாதபுரம், அரியலூர், பெரம்பலூர் ஆகிய மாவட்டங்கள் குறைந்த பாதிப்பை கொண்டுள்ளதாக மஞ்சள் வண்ணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளன.

புதுக்கோட்டை, தருமபுரி, கிருஷ்ணகிரி, மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்கள் கொரோனா பாதிப்பற்ற மாவட்டங்களாக இருந்து வருகின்றன.