கடலூரில் மேலும் 68 பேருக்கு கொரோனா! மொத்த எண்ணிக்கை 228 ஆக உயர்வு! கோயம்பேடு சந்தையில் இருந்து போனவர்களால்தான் அதிகமான நோய்த்தொற்று!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Siva Sankar | May 05, 2020 12:20 PM

சென்னை கோயம்பேடு சந்தையில் இருந்து கடலூர் சென்ற மேலும் 68 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

corona positive toll rises in cuddalore went from koyambedu market

நேற்று ஒரே நாளில் கடலூர் மாவட்டத்தில் 107 பேருக்கு கொரோனா தொற்று உள்ளது உறுதி செய்யப்பட்டது. இந்த நிலையில், இன்று மேலும் 68 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் சென்னை கோயம்பேடு சந்தையில் இருந்து கடலூர் மாவட்டத்தில் விருத்தாசலம், திட்டக்குடி உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்றவர்களே அதிகம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் சென்னை கோயம்பேடு சந்தை மூலம் கடலூரில் கொரோனா தொற்றுக்கு ஆளானவர்களின் எண்ணிக்கை 197ஆகவும், மொத்தமாக கடலூர் மாவட்டத்தில் கொரோனா தொற்று உள்ளவர்களின் எண்ணிக்கை 228-ஆகவும் உயர்ந்துள்ளது.