'தென்கோடியில் மீண்டும் அரியணை ஏறும் 'காங்கிரஸ்' ...முன்னணியில் 'வசந்த குமார்'!
முகப்பு > செய்திகள் > தமிழகம்By Jeno | May 23, 2019 01:14 PM
நாடாளுமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை நாடு முழுவதும் இன்று காலை 8 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது.
தமிழகத்தில் வெளியாகி வரும் வாக்கு எண்ணிக்கையில் பெரும்பாலான இடங்களில் திமுக மற்றும் காங்கிரஸ் கூட்டணி முன்னிலை பெற்று வருகிறது. இதில் தற்போதைய நிலவரப்படி 36 இடங்களில் திமுக கூட்டணி முன்னணி பெற்றுள்ளது. அதிலும் குறிப்பாக தமிழகத்தில் காங்கிரஸ் ஒரு தொகுதியை தவிர மற்ற தொகுதிகளில் காங்கிரஸ் முன்னிலை பெற்றுள்ளது.
கன்னியாகுமரி தொகுதியில் வசந்த குமார், ஆரணி தொகுதியில் விஷ்ணு பிரசாத், கரூர் தொகுதியில் ஜோதிமணி, கிருஷ்ணகிரி தொகுதியில் செல்லகுமார், சிவகங்கை தொகுதியில் கார்த்திக் சிதம்பரம், திருவள்ளூர் தொகுதியில் ஜெயக்குமார், திருச்சியில் திருநாவுக்கரசு, விருதுநகர் தொகுதியில் மாணிக் தாகூரும் முன்னணியில் இருக்கிறார்கள்.
இதனிடையே தேனி தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் இளங்கோவனுக்கும் அதிமுக வேட்பாளர் ரவீந்திரனுக்கும் கடுமையான போட்டி நிலவி வருகிறது. தற்போது அதிமுக வேட்பாளர் ரவீந்திரன் தேனி தொகுதியில் முன்னணியில் இருக்கிறார்.