‘இப்பவே 70 கிட்டத்தட்ட.. 25 வருஷம் கழிச்சா? இதெல்லாம் டூ மச்சா தெரியல?’.. வைரல் ட்வீட்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்By Siva Sankar | May 07, 2019 12:44 PM
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஜனாதிபதி ஆவார் என்று துரைமுருகன் பேசியதற்கு பதில் அளிக்கும் விதமாக எச்.ராஜா பதிவிட்டுள்ள ட்வீட் வைரலாகியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்தில் ஒட்டபிடாரம் சட்டமன்றத் தொகுதியில் நிகழ்ந்த திமுக பிரச்சார பொதுக் கூட்டத்தில் பேசிய துரைமுருகன், ‘இன்னும் 25 ஆண்டுகாலத்தில் இந்திய நாட்டின் ஜனாதிபதியாகக் கூட வரக்கூடிய தகுதி நம் தளபதிக்கு (திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்) உண்டு’என்று பேசியிருந்தார்.
இதற்கு பதில் அளிக்கும் விதமாக, தனது ட்விட்டர் பக்கத்தில், பாஜக தேசிய செயலாளர், ‘நண்பர் துரைமுருகன் அவர்களுக்கு நகைச்சுவை உணர்வு அதிகம். ஆனால் அதற்காக இன்று 70 வயதைத் தொடும் ஸ்டாலின் 25 வருடம் கழித்து ஜனாதிபதி ஆவார் என்பது டூ மச்சா தெரியலை?’ என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
எச்.ராஜாவின் இந்த ட்வீட் இணையத்தில் வைரலாகி வருகிறது.
நண்பர் துரைமுருகன் அவர்களுக்கு நகைச்சுவை உணர்வு அதிகம். ஆனால் அதற்காக இன்று 70 வயதைத் தொடும் ஸ்டாலின் 25 வருடம் கழித்து ஜனாதிபதி ஆவார் என்பது டூ மச்சா தெரியலை?
— Chowkidar H Raja (@HRajaBJP) May 7, 2019
