“நம் கையில் மாநில அரசு'...'நாம் காட்டுவதே மத்திய அரசு” !

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Arunachalam | May 23, 2019 08:52 AM

17 வது மக்களவைத் தேர்தல் கடந்த ஏப்ரல் மாதம் தொடங்கி மே 19 வரை 7 கட்டங்களாக நடைபெற்று முடிந்துள்ளது.

Flower decoration related election results in kalaignar samadhi at mar

மக்களவைத் தேர்தல் கடந்த ஒரு மாத காலமாக நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடந்து முடிந்த நிலையில், அதற்கான வாக்கு எண்ணிக்கை இன்று (23/05/2019) காலை 8 மணி முதல் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், மறைந்த முன்னாள் திமுக தலைவரும், முன்னாள் தமிழக முதலமைச்சருமான மு.கருணாநிதி அவர்களின் சமாதியில் இன்று மலர்களால் தேர்தல் சம்பந்தமான வாக்கியங்கள் கொண்டு அலங்கரிக்கப்பட்டுள்ளது.

மேலும், மக்களவைத் தேர்தலோடு சேர்த்து தமிழகத்தில் உள்ள 22 சட்டசபை தொகுதிகளுக்கும் தேர்தல் நடந்துள்ளதால், இதில் திமுக வெற்றி பெற்றால் தமிழகத்தில் திமுக ஆட்சி அமைக்கும் என்ற நிலையில் இருக்கிறது. இதனையடுத்து, மறைந்த திமுக முன்னாள் தலைவர் மு. கருணாநிதியின் சமாதியில்,  “நம் கையில் மாநில அரசு! நாம் காட்டுவதே மத்திய அரசு”!என்று மெரினாவில் உள்ள அவரது சமாதியில் மலர்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.