இவங்க யாருன்னு தெரியுதா...? 'தேர்தல் களத்தில் இறங்குறேன்...' 'அந்த' கட்சியோட கொள்கை எனக்கு ரொம்ப புடிச்சிருக்கு...! - மனம் திறக்கும் அம்பை தொகுதி வேட்பாளர்...!
முகப்பு > செய்திகள் > தமிழகம்நெல்லை அம்பாசமுத்திரத்தில் அ.ம.மு.க சார்பில், நெல்லை மாநகர கூடுதல் போலீஸ் கமிஷனர் வெள்ளத்துரையின் மனைவி ராணி ரஞ்சிதம் போட்டியிடுவதாக செய்தி வெளியாகியுள்ளது.
தமிழகம் மட்டுமல்லாது காடுகளின் தலைவனாக விளங்கியவர் வீரப்பன். அவரை பிடிக்க பல குழுக்கள் செயல்பட்டு வந்தன. அதில் கடந்த 2004 ஆம் ஆண்டு முதல் சந்தனவீரப்பனை பிடிக்கும் குழுவில் இடம் பெற்றிருந்தவர் வெள்ளத்துரை.
தமிழக போலீஸில் என்கவுன்டர் ஸ்பெஷலிஸ்டான இவர், மதுரை, திருச்சி உள்ளிட்ட நகரங்களில் பல ரவுடிகளை என்கவுன்டர் செய்தவர். கடந்த 2003 ஆம் ஆண்டு சென்னையில் ரவுடி அயோத்திகுப்பம் வீரமணியை என்கவுன்டர் செய்த குழுவிலும் இவர் இடம் பெற்றிருந்ததும் குறிப்பிடத்தக்கது.
தற்போது, நெல்லை மாநகர கூடுதல் கமிஷனராக பணியாற்றி வரும் வெள்ளத்துரை அவர்களின் மனைவி தான் ராணிரஞ்சிதம். 54 வயதான ராணி ரஞ்சிதம் எம்ஏ.எம்.பில் தமிழ் இலக்கியம் படித்து, திருச்சியில் உள்ள கல்லூரியில் தமிழ் பேராசிரியராக பணியாற்றி விருப்ப ஓய்வு பெற்றவர். தன்னால் இயன்றதை மக்களுக்கு செய்யவேண்டும் என சமுதாய நலப்பணிகளில் அக்கறை கொண்டுள்ள ராணி ரஞ்சிதம் அறக்கட்டளை நிறுவி அதன் வழியாக பல்வேறு நலத்திட்டங்களை மேற்கொண்டு வருகிறார்.
இந்நிலையில் தற்போது, வரும் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட மனோரஞ்சிதம் முடிவு செய்து, அம்பாசமுத்திரம் தொகுதியில் அ.ம.மு.க சார்பில், போட்டியிடுகிறார்.
இது குறித்து கூறிய ராணி ரஞ்சிதம், 'எனக்கு சின்ன வயதிலிருந்தே மக்களுக்கு உதவி செய்வது பிடிக்கும். இதுவரைக்கும் என்னால் முடிந்த நலப்பணிகளை மேற்கொண்டுதான் இருந்தேன்.
இன்னும் அதிக அளவில் மக்களுக்கு நேரடியாக செய்ய ஒரு பதவி அதிகாரம் தேவைப்படுது. அதற்கான, ஒரு வாய்ப்புக்காக காத்திருந்தேன். அந்த ஆர்வம் காரணமாகத்தான் இப்போது தேர்தலில் இறங்கியிருக்கிறேன்.
அ.ம.மு.க கொள்கைகள் பிடித்திருந்ததால், அந்த கட்சியை தேர்வு செய்தேன். இந்த தேர்தலில் போட்டியிடுவது என்னோட தனிப்பட்ட விருப்பம். என்னோட விருப்பத்துக்கு குறுக்கே என் கணவர் குறுக்கே நின்றதே இல்லை.
அவரோட டிபார்ட்மென்ட் வேற. என்னோட மக்கள் பணி வேற என்னை அம்பை மக்கள் ஜெயிக்க வைப்பார்கள்' என மனம் திறந்து கூறினார்.