'இந்தியர்கள் ஓட்டு உங்களுக்கு கிடைக்கும்னு நினைக்கறீங்களா?'... 'எனக்கு அவரோட சப்போர்ட் இருக்கு'... 'அதிபர் ட்ரம்ப் நம்பிக்கையுடன் சொன்ன பதில்'...
முகப்பு > செய்திகள் > உலகம்அமெரிக்கா வாழ் இந்தியர்களின் வாக்கு நிச்சயம் தமக்கு உண்டு என அதிபர் டொனால்ட் ட்ரம்ப் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் எதிர்வரும் அதிபர் தேர்தலில் இந்திய-அமெரிக்க சமூகம் அவருக்கு வாக்களிக்கும் என நம்புவதாக தெரிவித்துள்ளார். வெள்ளிக் கிழமை செய்தியாளர்கள் சந்திப்பு ஒன்றில் வரவிருக்கும் தேர்தலில் அமெரிக்கா வாழ் இந்தியர்கள் உங்களுக்கு வாக்களிப்பார்கள் என நினைக்கிறீர்களா என்று ட்ரம்பிடம் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.
அதற்கு பதிலளித்த அவர், "கடந்த ஆண்டு நாங்கள் ஹஸ்டனில் ஒரு அருமையான நிகழ்வு நடத்தினோம். பிரதமர் மோடி இன்னும் தாராளமாக இருந்திருக்க முடியாது. எங்களுக்கு இந்தியா மற்றும் பிரதமர் மோடியிடமிருந்து பெரும் ஆதரவு உள்ளது. இந்திய மக்கள் எனக்கு வாக்களிப்பார்கள் என உறுதியாக நினைக்கிறேன்" எனத் தெரிவித்துள்ளார். அமெரிக்க அதிபர் தேர்தல் இந்த ஆண்டு நவம்பர் 3ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், அதற்காக தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வரும் ட்ரம்ப் தேர்தலுக்கு முன்பே கொரோனாவுக்கான தடுப்பூசி வந்துவிடும் என நம்பிக்கை தெரிவித்துள்ளதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்
