'இந்த ஊசியின் விலை 16 கோடி'... 'குழந்தைக்கு வந்துள்ள வித்தியாசமான நோய்'... பரிதவித்து நிற்கும் கோயம்புத்தூர் தம்பதி!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Jeno | Mar 04, 2021 05:24 PM

அமெரிக்காவில் கிடைக்கும் இந்த ஊசியின் விலை இந்திய மதிப்பில் 16 கோடி ரூபாய் எனவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

Coimbatore Parents are struggling to save an 8 month old baby

மும்பை குழந்தை டீரா காமத் முதுகெலும்பு தசைநார் சிதைவு நோயால் பாதிக்கப்பட்டு அந்த நோயிற்கான தடுப்பூசியைப் பெற டீராவின் பெற்றோர் எவ்வளவு பெரிய போராட்டத்தை நடத்தினார்கள் என்பதை நம்மில் பெரும்பாலானோர் அறிந்திருப்பார்கள். தற்போது அப்படி ஒரு போராட்டத்தைத் தான் கோயம்புத்தூரைச் சேர்ந்த தம்பதியர் நடத்தி வருகிறார்கள்.

கோவை போத்தனூர் அம்மன்நகர் 3-வது வீதியைச் சேர்ந்த தம்பதி அப்துல்லா - ஆயிஷா. அப்துல்லா பால் பொருட்கள் விற்பனை செய்து வருகிறார். இவரின் 8 மாத பெண் குழந்தை ஸீஹா ஜைனப். இந்த குழந்தைக்கு எஸ்.எம்.ஏ எனப்படும் அரிய வகை மரபணு நோயின் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாகக் குழந்தை ஒரு வருடம் மட்டுமே உயிருடன் இருக்க வாய்ப்பு எனவும், அதற்குள் குழந்தையைக் காப்பாற்றக் குழந்தையின் உடலில் மரபணு ஊசி செலுத்த வேண்டும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

Coimbatore Parents are struggling to save an 8 month old baby

மரபணு ஊசி செலுத்தினால் மட்டுமே குழந்தை பிழைக்க வாய்ப்புள்ளதாக மருத்துவர்கள் கூறியுள்ளார்கள். ஆனால் அமெரிக்காவில் கிடைக்கும் இந்த ஊசியின் விலை இந்திய மதிப்பில் 16 கோடி ரூபாய் என்பது தான் அதிர்ச்சியின் உச்சம். அமெரிக்காவிலிருந்து ஊசி மருந்தை இந்தியாவிற்குக் கொண்டு வந்து குழந்தைக்குச் செலுத்தினால் மட்டுமே குழந்தை பிழைக்க வாய்ப்புள்ளதாக மருத்துவர்கள் கூறியுள்ளார்கள்.

8 மாத பெண் குழந்தையைக் காப்பாற்ற அந்த பெற்றோர் போராடி வரும் நிலையில், 16 கோடி ரூபாய் தொகையை எப்படிச் சேர்ப்பது எனத் தெரியாமல் பெற்றோர்கள் தவித்து வருகின்றனர். தன்னார்வ அமைப்புகள் மூலம் நிதியுதவியைக் கேட்டு வரும் பெற்றோர் மத்திய, மாநில அரசுகள் தங்களுக்கு மருத்து கிடைக்க  உதவ வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Coimbatore Parents are struggling to save an 8 month old baby

குழந்தையைக் காப்பாற்ற அரசே இந்த மரபணு நோய்க்கான மருத்தை வாங்கி கொடுக்க வேண்டும் எனவும் குழந்தையின்  பெற்றோர் வலியுறுத்தியுள்ளனர். இதற்கிடையே மும்பை குழந்தை டீரா காமத்திற்கு  இந்த ஊசி போட்ட பின்பு  தற்போது குணமடைந்து வருவதைச் சுட்டிக்காட்டியுள்ள அந்த பெற்றோர், பெங்களூரைச் சேர்ந்த தன்னார்வ தொண்டு  நிறுவனத்தில் இதற்கான உதவி செய்வதாக கேள்விப்பட்டுப் பெயர் பதிவு செய்து நிதிக்காகக் காத்திருக்கிறோம் எனத் தெரிவித்துள்ளார்கள்.

அதே நேரத்தில் அந்த தன்னார்வ நிறுவனம் வருடத்திற்கு 100 குழந்தை என்ற வகையில், குலுக்கல் முறையில் குழந்தைகளைத் தேர்வு செய்து நிதி வழங்கி வருவதால் உதவி கிடைக்குமா என்பதும் கேள்விக் குறியாக உள்ளது. இந்நிலையில் குழந்தையைக் காப்பாற்ற நிதிக்காக பல்வேறு வகையில் முயற்சி செய்து காத்திருப்பதாகவும், அதே வேளையில் மத்திய, மாநில  அரசுகளே அமெரிக்காவிலிருந்து இந்த நோய்க்கான  மருந்தைக் கொள்முதல் செய்து கொடுத்து  குழந்தையைக் காப்பாற்ற வேண்டும் எனவும் குழந்தையின் பெற்றோர் எதிர்பார்த்துள்ளனர்.

ஏற்கனவே முதல் குழந்தை இதே பாதிப்பால் உயிரிழந்து விட்ட நிலையில் இரண்டாவதாகப் பிறந்த பெண் குழந்தையைக் காப்பாற்றத் தம்பதியினர் அரசின் உதவியை எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர். குழந்தையைக் காப்பாற்ற வழி இருந்தும் அதற்கான  விலை எட்டமுடியாத உயரத்தில் இருப்பதால் பெற்றோர் என்ன செய்வது எனத் தெரியாமல் பரிதவித்து நிற்கிறார்கள்.

Tags : #COIMBATORE

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Coimbatore Parents are struggling to save an 8 month old baby | Tamil Nadu News.