"கணவரின் சகோதரருடைய கார் மற்றும் பைக்கை".. அடிச்சு நொறுக்கிய பெண்!.. வீடியோ வெளியானதால் பரபரப்பு!
முகப்பு > செய்திகள் > தமிழகம்கோவையில் இளம்பெண் ஒருவர் தன்னுடைய கணவரின் சகோதரருடைய கார் மற்றும் இருசக்கர வாகனத்தை அடித்து நொறுக்கி உடைக்கும் காட்சிக்கு சமூக வலைகளில் வயதாகி வருகிறது.

கோவை கவுண்டம்பாளையம் பகுதியை சேர்ந்த தாமஸ் மற்றும் கிரேஸி மேரி ஆகியோரின் மகன்கள் சார்லி மற்றும் டால்சன் இருவரும் அதே பகுதியில் தனித்தனியே தங்கள் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர். இதில் குடும்பத் தலைவர் தாமஸ் இறந்த பிறகு கிரேசி தன்னுடைய மூத்த மகன் வீட்டில் வசித்து வருகிறார்.
இதனிடையே தன்னுடைய மாமனார் பெயரில் இருக்கும் வீட்டை தங்கள் பெயருக்கு மாற்றி தருமாறு, சார்லியின் மனைவியும் கிரேஸியின் மருமகளுமான சூரியா அடிக்கடி தன்னுடைய மாமியாரிடம் கேட்டு தகராறு செய்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் சார்லியின் வீட்டுக்கு டால்சன் தன்னுடைய தாயை காண வந்திருந்த போது அவருடைய வாகனங்களை சூரியா அடித்து நொறுக்கி உள்ளார்.
மேலும் எதற்காக நள்ளிரவில் தன்னுடைய அறைக்கு வந்தீர்கள் என்று கேட்டும், தகாத வார்த்தைகளை பேசியும் டால்சனின் வாகனங்களை அடித்து நொறுக்கி இருக்கிறார் சூரியா. இந்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன.

மற்ற செய்திகள்
