‘ஒரு தடவதாண்டா தவறும்’.. இன்னும் இருக்கு.. பஞ்ச்களை தெறிக்கவிடும் CSK வீரர்கள்.. வைரல் ட்வீட்கள்!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுBy Siva Sankar | Apr 07, 2019 10:44 AM
கிரிக்கெட் பிரபலங்கள் பலரும் கிரிக்கெட் சீசனை தமிழில் ட்வீட் செய்து கொண்டாடி வருகின்றனர். அதிலும் சென்னை அணி வீரர்களை சொல்லவே வேண்டாம். அவர்கள் இதில் முன்னோடிகளாக திகழ்கிறார்கள்.

இதில் ஹர்பஜன் சிங்தான் மூத்தவர் என சொல்லலாம். இவரின்,சூப்பர் டீலக்ஸ் பட பாணியலான ‘ஆஹா’ வசனம் தொடங்கி, 'அடிபட்ட சிங்கம்' வசனம் வரை எல்லாமே ட்வீட்டுகளுமே ஹிட் அடித்தன. தொடர்ந்து தற்போது, ‘நீ தோத்துட்டன்னு இந்த உலகமே சொன்னாலும் நம்ப வேண்டியது உலகத்த இல்ல.. உன்ன மட்டும்தான்’ வசனம் வெறித்தனமான ரசிகர்களால் தெறிக்க தெறிக்க பகிரப்பட்டு வருகிறது.
நீ தோத்துட்டன்னு இந்த உலகமே சொன்னாலும் நம்ப வேண்டியது உலகத்த இல்ல உன்ன மட்டும் தான்.நான் என்ன நம்புனேன் அத தாண்டி என் நண்பன் @msdhoni @ChennaiIPL @CSKFansOfficial என்ன நம்புறாங்க அதுக்கு கைமாறா வெற்றி ஓரம்கட்டகட்டதான் வெறித்தனம் எவியா ஏறும் சந்தோஷத்துல அழுகுறேன் நன்றி #CSKvKXIP pic.twitter.com/LJlNZ207a9
— Harbhajan Turbanator (@harbhajan_singh) April 6, 2019
இந்த நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, முதல் 3 போட்டிகளில் வெற்றிபெற்று, பின்னர் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான 4வது போட்டியில் தோல்வியை தழுவியிருந்தது. எனினும் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியினருடன் மோதிய 5-வது போட்டியில் சென்னை அணி வென்றது.
இதை கொண்டாடும் விதமாக இம்ரான் தாஹிரின் ட்விட்டர் பக்கத்தில், ‘ஒரு தடவதாண்டா தவறும்.. எடுடா வண்டிய.. போடுடா விசில’ என்று பஞ்ச் ட்வீட் அடித்திருக்கிறார். இந்த ட்வீட் இணையத்தில் பராசக்தி எக்ஸ்பிரஸ் ட்வீட் என்கிற பெயரில் கலக்கி வருகிறது. ஆனால் இது இம்ரான் தாஹிரின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கமா அல்லது ஐபிஎல் சீசனுக்காக இம்ரானின் ஒப்புதலோடு சென்னை அட்மின்களால் தொடங்கப்பட்ட ட்விட்டர் பக்கமா என்கிற சந்தேகம் பலருக்கும் எழுந்துள்ளது.
Oru thadavai than da thavarum @ChennaiIPL #eduda vandiya poduda whistle
— Imran Tahir (@ImranTahirSA) April 6, 2019
