அதிகாலை 2.45 க்கு சைக்கிள்ல ரோந்து போன IPS அதிகாரி.. சென்னையை கலக்கும் சிங்கப் பெண்.. டிவிட்டரில் முதல்வர் சொன்ன விஷயம்..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்சென்னையில் அதிகாலை நேரத்தில் சைக்கிளில் சென்று அதிகாரிகளை ஆய்வு செய்திருக்கிறார் இளம் ஐபிஎஸ் அதிகாரி ஒருவர்.

"எனக்கும் ஒன்னு செஞ்சு குடுங்க"..மரவேலையில் திறமையை காட்டிய நபர்..ஆனந்த் மஹிந்திரா போட்ட ட்வீட்..!
வட சென்னையை சேர்ந்த காவல்துறை துணை ஆணையர் அதிகாலை 2.45 மணிக்கு சைக்கிளில் சுற்றுப் பயணம் மேற்கோண்டிருக்கிறார். இரவு பணியில் ஈடுபட்டுவரும் அதிகாரிகளை சந்தித்து பேசியதுடன், தனியாக சுற்றித் திரிந்த நபர்களையும் விசாரித்திருக்கிறார் இந்த சிங்கப் பெண்.
ரம்யா பாரதி ஐபிஎஸ்
கடந்த 2008 ஆம் ஆண்டு ஐபிஎஸ் தேர்ச்சி பெற்றவர் ஆர்வி. ரம்யா பாரதி. இவர் சென்னை நகர வடக்கு மண்டலத்தின் இணை ஆணையராக பணியாற்றி வருகிறார். இவர் இரவு நேரத்தில் பணியாற்றும் சக காவல்துறை அதிகாரிகளை ஆச்சர்யப்படுத்தும் வகையில் இரவு நேரத்தில் சைக்கிளில் ரோந்து பணியை மேற்கொண்டிருக்கிறார்.
இந்நிலையில் இந்த அதிகாரி சாதாரண உடையில் தனிப்பட்ட பாதுகாப்பு அதிகாரி (PSO) ஒருவருடன் சுமார் ஒன்பது கிலோமீட்டர் பயணம் செய்திருக்கிறார். இருவரும் சைக்கிளில் ரோந்து சென்றிருக்கின்றனர். அதிகாலை 2.45 மணிக்கு பயணத்தை தொடங்கிய அவர், இரவு ரோந்து பணியை அதிகாலை 4.15 மணிக்கு முடித்திருக்கிறார்.
சோதனை
ரோந்து பணியின் போது, பேட்ரோல் வாகனங்களை ஆய்வு செய்த ரம்யா, தனது வருகையை லெட்ஜரில் குறிப்பிட்டிருக்கிறார். இதுகுறித்து அவர் பேசுகையில்," அதிகாலையில் வட சென்னையின் நடவடிக்கைகளை அறிந்துகொண்டது சிறப்பான அனுபவமாக இருந்தது" என்றார்.
முதல்வர் பாராட்டு
இந்நிலையில் இரவு நேர ரோந்துப் பணியை சைக்கிளில் மேற்கொண்ட ரம்யா பாரதி ஐபிஎஸ்-ஐ தமிழக முதல்வர் ஸ்டாலின் டிவிட்டர் வாயிலாக பாராட்டி உள்ளார். இதுகுறித்து தனது அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கத்தில் ஸ்டாலின்,"ரம்யா பாரதி அவர்களுக்கு வாழ்த்துகள் . பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகளைக் குறைக்கவும் பெண்களின் பாதுகாப்பை உறுதிசெய்யவும் டி.ஜி.பி. அவர்களுக்கு ஆணையிட்டுள்ளேன். தமிழ்நாடு காவல்துறை சட்டம் - ஒழுங்கை நிலைநிறுத்துவதில் இரும்புக் கரம் கொண்டு செயல்படும்" எனக் குறிப்பிட்டு உள்ளார்.
இரவு நேரத்தில் துணிச்சலுடன் சைக்கிளில் ரோந்து பணியில் ஈடுபட்ட ரம்யா பாரதி ஐபிஎஸ்-ஐ அனைவரும் பாராட்டி வருகின்றனர்.

மற்ற செய்திகள்
