"எனக்கும் ஒன்னு செஞ்சு குடுங்க"..மரவேலையில் திறமையை காட்டிய நபர்..ஆனந்த் மஹிந்திரா போட்ட ட்வீட்..!
முகப்பு > செய்திகள் > இந்தியாமுழுவதும் மரத்திலேயே Treadmill செய்துவரும் நபரை பிரபல தொழிலதிபரும் இந்தியாவின் முன்னணி பணக்காரர்களில் ஒருவருமான ஆனந்த் மஹிந்திரா பாராட்டியுள்ளார்.
ஆனந்த் மஹிந்திரா
மஹிந்திரா குழுமத்தின் தலைவர் ஆனந்த் மஹிந்திரா டிவிட்டர் உள்ளிட்ட சமூக வலை தளங்களில் துடிப்புடன் இயங்கிவருபவர். இணைய வெளிகளில் தான் சந்திக்கும் மனிதர்களிடையே பன்முக திறமை கொண்டவர்களையும், கடின உழைப்பாளிகளையும் கண்டறிந்து அவர்களுக்கான அங்கீகாரம் வழங்குவதை ஆனந்த் மஹிந்திரா தொடர்ந்து செய்துவருகிறார். இந்நிலையில், தெலுங்கானாவை சேர்ந்த நபர் ஒருவரை பாராட்டியுள்ளார் மஹிந்திரா.
ட்ரெட்மில்
பொதுவாக உடற்பயிற்சி செய்பவர்கள் அனைவரும் வாங்க விரும்பும் சாதனம் டிரெட்மில். ஆனால், இதற்கு இடவசதியும் மின்சாரமும் தேவைப்படும். ஆனால், முழுவதும் மரத்தால் இயங்கக்கூடிய டிரெட்மில் ஒன்றை வடிவமைத்திருக்கிறார் தெலுங்கானாவை சேர்ந்த நபர் ஒருவர்.
மரச் சட்டங்களால் கால் வைக்கும் பகுதியை உருவாக்கிய அந்த நபர், பக்கவாட்டு கட்டைகளில் பொருத்தப்படும் உருளைகளின் வாயிலாக மரத்தின் மீது எளிமையாக நடக்கிறார். இதற்கு மின்சாரமோ, கூடுதல் இடமோ தேவையில்லை. இந்த மரத்தினால் ஆன டிரெட்மில்லை அவர் உருவாக்கும் வீடியோ சமூக வலை தளங்களில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது.
பாராட்டு
மரத்தினால் டிரெட்மில் செய்யும் நபரின் வீடியோ சமூக வலைத் தளங்களில் வைரலாக அதனை பார்த்த ஆனந்த் மஹிந்திரா தனது டிவிட்டர் பக்கத்தில்," வணிகமாகிவிட்ட, ஆற்றலை உறிஞ்சும் சாதனங்கள் பெருகிவிட்ட இந்த காலத்தில் இப்படி ஒரு கருவியை கையால் செய்திருப்பது ஆச்சர்யப்படுத்துகிறது. இது கைவினை திறன் மீதான அவரது ஆர்வத்தையும் நெடுநேர உழைப்பையும் காட்டுகிறது. இது ஒரு ட்ரெட்மில் மட்டும் அல்ல, கலைப்பொருள். எனக்கும் ஒன்று வேண்டும்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக தெலுங்கானா மாநிலத்தின் வணிக மற்றும் தொழில்துறை அமைச்சர் கேடி. ராமாராவ் இந்த கலைஞரை பாராட்டியதோடு, இந்தியாவின் மிகப்பெரிய Prototype தயாரிப்பு மையமான T-Works நிறுவனத்தை Tag செய்து அந்த நபர் கூடுதலாக ட்ரெட்மில் செய்ய உதவுமாறு கோரிக்கை ஒன்றையும் முன்வைத்தார்.
முழுவதும் மரத்தால் செய்யப்பட்ட ட்ரெட்மில்லை தெலுங்கானா நபர் உருவாக்கும் வீடியோ இப்போது சமூக வலை தளங்களில் வைரலாக பரவிவருகிறது.
In a world of commoditised, energy hungry devices, the passion for craftsmanship, the hours of dedicated efforts in hand-making this device makes it a work of art, not just a treadmill. I want one… pic.twitter.com/nxeGh6a2kf
— anand mahindra (@anandmahindra) March 24, 2022