"சார்.. உங்க BAG-அ செக் பண்ணணும்".. கம்பீரமான IPS ஆபிசர்.. ஆனா கொழந்த மனசுப்பா இவருக்கு.. ஏர்போர்ட்டில் நடந்த வேடிக்கை சம்பவம்..
முகப்பு > செய்திகள் > இந்தியாஒடிஷா மாநிலத்தை சேர்ந்த மூத்த ஐபிஎஸ் அதிகாரியான அருண் போரா போட்ட ட்வீட் இப்போது வைரலாகி வருகிறது.

இணைய தளங்களில் நாம் தினந்தோறும் பல வகையான வினோத சம்பவங்களை பார்த்து வருகிறோம். சொல்லப்போனால் வேடிக்கையான சம்பவங்களை அறிந்துகொள்ளவே பலரும் சமூக வலை தளங்களுக்கு வருவதுண்டு. அப்படியான நபர்களுக்கு செம்ம ட்ரீட் ஒன்றை கொடுத்து உள்ளார் ஐபிஎஸ் அதிகாரியான அருண் போரா .
விமான நிலையம்
ஒடிஷாவின் போக்குவரத்துத் துறை கமிஷனராக பணிபுரிந்து வருபவர் மூத்த ஐபிஎஸ் அதிகாரியான அருண் போரா. டிவிட்டர் உள்ளிட்ட சமூக வலை தளங்களில் துடிப்புடன் இயங்கி வருபவரான அருண் போரா, நேற்று ராஜஸ்தான் மாநில தலைநகரான ஜெய்ப்பூரில் உள்ள விமான நிலையத்திற்கு சென்றிருக்கிறார். அப்போது சில பைகளையும் அருண் போரா உடன் எடுத்துச் சென்றுள்ளார்.
பரிசோதனை
விமான நிலையத்தின் பரிசோதனை பிரிவில் இருந்த அதிகாரிகள் ஐபிஎஸ் அதிகாரியான அருண் போராவின் பையை பரிசோதிக்க வேண்டும் எனத் தெரிவித்து உள்ளனர். இதனை அடுத்து தனது பையை திறந்து உள்ளார் அருண். உள்ளே இருந்த பொருளை கண்டு விமான நிலைய அதிகாரிகள் சற்று நேரம் ஷாக்கில் உறைந்து போயினர். ஆம். ஐபிஎஸ் அதிகாரியான அருண் போராவின் பையில் பச்சை பட்டாணி கிலோ கணக்கில் இருந்திருக்கிறது.
வைரல் ட்வீட்
இதனை அடுத்து தனது அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கத்தில் அருண் போரா,"ஜெய்ப்பூர் விமான நிலையத்தில் உள்ள பாதுகாப்பு அதிகாரி ஒருவர் என்னுடைய பேக்-ஐ திறக்கும்படி கூறினார்" எனக் குறிப்பிட்டு பச்சை பட்டாணி நிரம்பி வழியும் தன்னுடைய பேக்-ன் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.
அருண் போராவின் இந்த ட்வீட் இதுவரை 62 ஆயிரம் லைக்குகளை பெற்றுள்ளது. மேலும், சக ஐபிஎஸ் மற்றும் ஐஎஃப்எஸ் அதிகாரிகள் இதுகுறித்து நகைச்சுவையுடன் கமெண்ட் செய்து வருகின்றனர்.
கிலோ 40 ரூபாய்
இதுகுறித்து டிவிட்டர் பயனார் ஒருவர் கேட்ட கேள்விக்கு பதில் அளித்த அருண்," கிலோ 40 ரூபாய்க்கு விற்றார்கள். அதுதான் 10 கிலோ வாங்கிவிட்டேன்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
ஐபிஎஸ் அதிகாரியான அருண் போரா தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்த இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.
டிரான்ஸ்ஃபர்-ல் சென்ற ஆசிரியர்கள்.. "போகாதீங்க".. கட்டிக் கொண்டு கதறி அழுத மாணவிகள்!

மற்ற செய்திகள்
