கேட்டரிங் வேலைன்னு சொல்லி.. குவைத்தில் தமிழ்ப்பெண்ணுக்கு நேர்ந்த உறையவைக்கும் சம்பவம்.. முதல்வரிடம் கண்ணீர் மல்க கோரிக்கை

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Pandidurai T | Feb 18, 2022 06:09 PM

நாமக்கல்: குவைத்தில் வேலை வாங்கி தருவதாகக் கூறி, ஏமாந்த பெண் ஒருவர் துபாயில் அடைத்து வைக்கப்பட்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tamil woman locked up in Dubai after going to work in Kuwait

படித்து முடித்ததும் வெளிநாட்டு வேலைக்கு செல்வோருண்டு. நல்ல வாய்ப்புகளினால் இங்கே இருக்கும் பணியை துறந்து செல்பவரும் உண்டு. குடும்ப சுமையை ஆண்கள் மட்டும் தான் சுமக்க வேண்டும் நிலை மாறி பெண்களும் சுயமாக சம்பாரிக்க தொடங்கிவிட்டனர். குடும்பத்தை காக்க பெண்களும்  கட்டாயம் என்று ஒன்று நேர்கையில் விமானம் ஏறித்தான் ஆக வேண்டும். வெளிநாட்டுக்கு வேலைக்கு சென்று ஏமாற்றப்படுபவர்களின் கண்ணீர் கதையை செய்தியாக படித்து தெரிந்துகொள்கிறோம். அவ்வாறு ஒரு பெண் ஏமாந்த கதை கண்ணீரை வரவழைத்துள்ளது.

குவைத்தில் வேலை

நாமக்கல் அடுத்த ரெட்டிபட்டியை சேர்ந்த திருமணி மகள் கலைச்செல்வி(32). கேட்டரிங் தொழில் செய்து வந்தார். கொரோனாவால் வேலை வாய்ப்பு இழந்து, பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளார். இதனால் வெளிநாட்டுக்கு சென்று வேலை செய்ய முயற்சி செய்தார். குவைத்தில் இருக்கும் சபீர் என்பவர், அங்கு வேலை இருப்பதாகவும், அதற்கு ஏற்பாடு செய்து தருவதாகவும், உடனே டூரிஸ்ட் விசா எடுத்து கொண்டுவரும்படி கூறியுள்ளார். இதனை நம்பி  கலைச்செல்வியும், கடந்த 2 மாதத்துக்கு முன் டூரிஸ்ட் விசாவுடன் துபாய் சென்றார்.

டூரிஸ்ட் விசா மூலம் பயணம்

ஆனால், சபீர் கூறியபடி குவைத்தில் வேலை வாங்கி கொடுக்காமல், துபாயில் ஒரு அறையில் கலைச்செல்வியை அடைத்து வைத்துள்ளார்.

இதனால் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த கலைச்செல்வி, இதுகுறித்து தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தனை பேஸ்புக் மூலம் தொடர்பு கொண்டு, தனது நிலை குறித்தும், தன்னை மீட்டு சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கும்படி உருக்கமாக பதிவிட்டுள்ளார். இதுதொடர்பான செய்தி அமைச்சர் மதிவேந்தன் பார்வைக்கு சென்றது. இதையடுத்து,  திமுக அயலக அணி இணைச்செயலாளர் டாக்டர் யாழினி மூலம் கலைச்செல்வியை மீட்க அமைச்சர் மதிவேந்தன் ஏற்பாடு செய்தார். வெளிநாடு வாழ் தமிழர்கள், இந்திய நலச்சங்கத்தின் அமீரக தலைவர் மீரான், கலைச்செல்வியை மீட்டு பாதுகாப்பான இடத்தில் தங்க வைத்தார்.

தமிழக முதல்வருக்கு நன்றி

பின்பு கலைச்செல்வியின் பாஸ்போர்ட்டை பெற்று, தனது சொந்த செலவில் தமிழகம் செல்ல ஏற்பாடு செய்தார். தமிழகம் வந்த கலைச்செல்வி நேற்று முன்தினம் சென்னையில் முதல்வர் மு.க ஸ்டாலினை சந்தித்து நன்றி தெரிவித்தார். நேற்று காலை தனது சொந்த ஊரான நாமக்கல் அடுத்த ரெட்டிபட்டிக்கு வந்து சேர்ந்தார். அப்போது கலைச்செல்வி கூறியதாவது, குவைத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி, என்னை அழைத்து சென்று ஏமாற்றி, ஒரு அறையில் அடைத்து வைத்தனர்.

அமைச்சர் மதிவேந்தனின் பேஸ்புக் பக்கத்தில் என்னை மீட்கும்படி கோரிக்கை வைத்தேன். தமிழக முதல்வர் எடுத்த நடவடிக்கையால், என்னால் அங்கிருந்து சொந்த ஊருக்கு வரமுடிந்தது. முதல்வருக்கும் என்னை அங்கிருந்து மீட்டு சொந்த ஊருக்கு அனுப்பி வைத்தவர்களுக்கும் நன்றி" என கண்ணீர் மல்க தெரிவித்தார்.

Tags : #KUWAIT #TOURIST VISA #NAMAKKAL #KALAISELVI #CM MK STALIN #MINISTER MATHIVENDAN #DUBAI #FACEBOOK

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Tamil woman locked up in Dubai after going to work in Kuwait | Tamil Nadu News.